வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் - ஆதன மீள்மதிப்பீடு தொடர்பான அறிவித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2017 (புதன்கிழமை)
நகராட்சி மன்றத்தின் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுத்து பொதுமக்களுக்கான சேவைகளை திருப்திகரமாக வழங்குவதற்கு ஒவ்வொருவரும் தமது ஆதனவரியினை நிலுவையின்றி செலுத்துவது அவசியமானதாகும்.
இப்பிரதேசத்தில் இறுதியாக 2003ம் ஆண்டு ஆதன மதிப்பீடு செய்யப்பட்டு அதன் பிரகாரத்தின் படி ஆதனவரி அறவிடப்பட்டுவருகின்றது. ஐந்து வருடங்களுக்கொரு முறை ஆதன மீள்மதிப்பீடு செய்யப்படல் வேண்டுமாயினும் பல்வேறு தடைகள் காரணமாக இப்பணிமுன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் 14 வருடங்களுக்கு முற்பட்ட பெறுமதியில் ஆதனவரியை அறவிட்டு, தற்போதைய செலவினங்களை ஈடுசெய்து மக்களுக்கான சேவைகளை திருப்திகரமாக வழங்க முடியாதுள்ளது. எனவே இதனை நிவர்த்தி செய்யும் வகையில் தற்போது ஆதன மீள்மதிப்பீட்டு பணிகள் நடைபெற்று புதிய பெறுமதிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
பொதுமக்கள் நகராட்சிமன்ற அலுவலகத்திற்கு (காலை 9:00 தொடக்கம் மாலை 3:00 மணி வரை) வருகை தந்து
தமது ஆதனங்கள் தொடர்பான விபரங்களையும் ஆண்டொன்றிற்கு செலுத்தவேண்டிய ஆதனவரி
பெறுமதியினையும் அறிந்துகொள்ள முடியுமெனவும் 2018 ம் ஆண்டு முதல் புதியவரியினை
நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகிறன.
ஆதன உரிமையாளர்கள் புதிய ஆதனவரி தொடர்பிலான தங்களது அபிப்பிராயங்கள் ஆலோசனைகளை
எதிர்வரும் 31.12.2017 இற்கு முன்னர் எழுத்து மூலமாக நகராட்சி மன்ற அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.