சந்நிதியிலிருந்து அக்கரைக்கான புதிய பாலம் விரைவில் திறப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 21/07/2018 (சனிக்கிழமை)
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தையும் அக்கரையையும் இணைக்கும் வகையில் பொது மக்கள் பயன்படுத்தக் கூடிய வகையில் தடுப்பு அணையையொட்டி அமைக்கப்பட்டுள்ள பாலம் விரைவில் மக்கள் பாவனைக்கு திறக்கப்படவுள்ளது.
மகோற்சவ காலங்களில் வலிகாமம் பகுதியிலிருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக தற்காலிக மண் பாலம் கடந்த காலங்களில் அமைக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சேதமடைந்த நிலையில் இருந்த நீரேரியின் தடுப்பு அணை உலக வங்கியின் உதவியுடன் புனரமைக்கப்பட்டு பணிகள் தற்போது நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளது.
செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.