தொண்டைமானாறு உவர் நீர் தடுப்பணை மக்கள் பாவனைக்கு திறப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 23/08/2018 (வியாழக்கிழமை)
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தையும் அக்கரையையும் இணைக்கும் வகையில் பொது மக்கள் பயன்படுத்தக் கூடிய வகையில் தடுப்பு அணையையொட்டி அமைக்கப்பட்டுள்ள பாலம் நேற்று புதன்கிழமை மக்கள் பாவனைக்கு திறத்து வைக்கப்பட்டது.
400 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட தொண்டைமானாறு குறுக்கு அணைஇணைய வடக்கு மாகாண அவைத்தலைவர் மற்றும் விவசாய அமைச்சு ஒன்றிணைந்து திறந்து வைத்தனர்.
மகாவலி அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியுடன் புதிதாக அமைக்கப்பட்ட தொண்டைமானாறு கடல் நீரோரிக்கு குறுக்காக அமைக்கப்பட்ட வான்கதவும், பாலமும் நேற்று புதன்கிழமை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடக்கு மாகாண விவசாய அமைச்சர் சிவநேசன் மற்றும் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் மாகாண சபை உறுப்பினர் பொ.ஜங்கரநேசன் மற்றும் பா. கஜதீபன், அரியகுட்டி பரஞ்சோதி மற்றும் பொறியியல் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
தொண்டைமானாறு ஆலய பெரு விழா ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து வலிகாமம் பகுதியிலிருந்து வரும் பக்தர்களின் நன்மைக்காக இவ் குறுக்கு அணையின் இரு பக்கமும் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் நேரடி நிதியுதவியில் வடக்கு விவசாய அமைச்சினால் இவ் குறுக்கு அணை புதிதாக கட்டப்பட்டது. அத்துடன் குறுக்கு அணையுடன் சேர்ந்து தொண்டைமாறு ஆலய உற்சவ காலப்பகுதியில் பக்தர்கள் கோவிலுக்கு இலகுவாக செல்வதற்கு குறுக்கு அணையின் இரண்டு பக்கமும் தூய இரும்பினால் பாலமும் அமைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.