தானாக இயங்கக் கூடிய காரை (Self Driving Car) ஜப்பான் நெடுஞ்சாலைகளில் அடுத்தவருடம் பரீட்சார்த்திக்க உத்தேசித்துள்ளதாக நிசான் (Nissan) கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கார்கள் ஜப்பானின் நெரிசல் மிகுந்த நகர்களின் வீதிகளில், 2020 வருடமளவில் தானாகவே சாரதிகள் இன்றி இயங்கும் என்றும் நிசான் நிறுவனத்தின் அதிகாரி Carlos Ghosn தெரிவித்துள்ளார்.
படிப்படியாக தயாரிக்கப்பட்டு பரீட்சார்த்திக்கப்படவுள்ள இந்த திட்டத்தில், அடுத்தவருடம் 2016 இல் பரீட்சார்த்த கார்கள் (Models) ஜப்பான் நெடுஞ்சாலைகளிலும், பின்னர் 2018 இல் இவை ஆபாத்தான பகுதிகள் (Hazards) மற்றும் பாதை மாறுதல்களை தானாகவே செய்யக்கூடியதாக இருப்பதுடன், அதனைத்தொடர்ந்து 2020 இல் மக்கள் நடமாட்டமுள்ள பெருநகர்களின் வீதிகளில் தானாகவே இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.