65 மணித்தியாலங்களும் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்கமாட்டோம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2015 (புதன்கிழமை)
இந்தியா முன்வைத்திருந்த இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்புக்குள் வருடத்தில் 65 நாட்கள் மீன்பிடிக்க அனுமத்திக்கும் திட்டத்தை இலங்கை அரசு நேற்று செய்வாய்கிழமை நிராகரித்துள்ளது.
65 நாட்கள் அல்ல, 65 மணித்தியாலங்களுக்கும் தாம் உடன்பட மாட்டோம் என்று மீன்பிடி வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
காலியில் பேசும் போது இது பற்றி தெரிவித்த அமைச்சர், இந்தியா முன்வைத்த “இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்புக்குள் வருடத்தில் 65 நாட்கள் மீன்பிடிக்க அனுமத்திக்கும் திட்டத்தை இலங்கை அரசு நிராகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். (PTI)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.