கடந்த மாதம் ஆரம்பித்துள்ள வடகீழ் பருவப்பெயர்சிக் காலநிலையைத் தொடர்ந்து, யாழ் தீபகற்பத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக குறிப்பிடக் கூடிய மழை பெய்துவருகின்றது. இதனால் பல நீர்நிலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதை காணக்கூடியாதகவுள்ளது.
கீழே படங்களில் வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய குளத்தில் நீர் மட்டம் உயர்ந்திருப்பதையும், இளைஞர்கள் குதூகாலமாக குளத்தினுள் குளிப்பதையும் காணலாம். நிலத்தடி நீரை நம்பியுள்ள யாழ் தீபகற்பத்தின் பிரதான நீர் வளமாக வடகீழ் பருவப்பெயர்சிக் காலநிலை விளங்குவது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் பலத்த மழை பெய்யுமென இலங்கை வானிலை அவதான நிலையம் (Meteorological department of Srilanka) அறிவித்துள்ளது -
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.