நாட்டின் வடபகுதியில் வடகீழ் பருவ பெயற்சி காலநிலை தற்பொழுது ஆரம்பமாகியுள்ளது. யாழ்பாணத்தின் பல இடங்களில் நேற்று வானம் மேக மூட்டமாக இருந்ததுடன், பரவலாக மழை பெய்துள்ளது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கின் சில பகுதிகளில் ஐப்பசி மாதத்தின் இறுதிப் பகுதியில் ஆரம்பமாகும் வடகீழ் பருவ பெயற்சி காலநிலை (North east monsoon) ஆனது தை மாத நடுப்பகுதி வரை நீடிப்பது வழமையாகும்.
சுமார் 1200 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியை வருடந்தோறும் பெறும் யாழ் தீபகற்பத்தின் பிராதான நீர்மட்டம் தற்பொழுது ஆரம்பித்துள்ள வடகீழ் பருவ பெயற்சி காலநிலை மூலமே கிடைக்கப்பெறுவது குறிப்பிடத்தகது ஆகும். மேலும் யாழ் தீபகற்பத்தின் நீர்த் தேவையின் பிரதான வளமாகவும் இது அமையப்பெற்றுள்ளது.
இது இவ்விதமிருக்க நாட்டின் தலைநகர் கொழும்பிலும் நேற்று முழுவதும் பரவலாக மழை பெய்திருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.