வடமாகாண அதிபர்கள், ஆசிரியர்கள் இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் தொழிற்சங்க இணைந்து நடத்தும் சுகவீனப் போராட்டத்திற்கு வல்வெட்டிதுறையில் உள்ள அனைத்து பாடசாலைகளும் ஆதரவு வழங்கி பாடசாலைகள் இயங்கவில்லை.
இப்போராட்டம் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
சுகயீனப் போராட்டத்தின் முதலாவது நாள் வடமாகாணத்திலுள்ள பல பாடசாலைகளில் அதிபர் ஆசிரியர்கள் எவரும் கடமைக்குச் செல்லவில்லை. பாடசாலை மாணவர்கள் பலர் வருகை தரவில்லை. வருகை தந்த மாணவர்களும் நிலமையை கருத்தில் கொண்டு வீடு திரும்பினர்.
இரு தினங்களிலும் காலை 10 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நடைபெறும் போராட்டத்தில் அதிபர்கள் ஆசிரியர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் தொழிற்சங்க பிதிநிதிகள் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
நீண்டகாலமாக நிலவிவரும் அதிபர் , ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்த்து சம்பளத்தை அதிகரிக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் - போலியான வாக்குறுதிகளை வழங்கி அரசு தொடர்ச்சியாக எம்மை ஏமாற்றி வந்துள்ளது.
அரசியல் ரீதியாக நியமனங்களை வழங்கி கல்வித்துறையை சீரழித்து வருகின்றது. ஆசிரியர் அதிபர்களின் ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்த முயற்சிக்கிறது.
பிரிவெனா மற்றும் நன்கொடை பெறும் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத்திட்டத்தை வழங்கப் பின்னடிக்கிறது. ஆசிரியர்களுக்கு தேவையற்ற அழுத்தங்களைப் பிரயோகித்து வருகிறது.
தேசிய வருமானத்தில் கல்விக்கு 6% வீதத்தை ஒதுக்காமல் பெற்றோரிடம் பணம் அறவிட்டு வருகின்றது. இதற்கான தீர்வினைப் பெறுவதற்காகவே இந்த சுகயீனப் போராட்டம் நடைபெறுகிறது என இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் தொழிற்சங்கம் என்பன கூட்டாக அறிவித்துள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.