Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
ஞா. மனோகரன் (ஜக்கிய ராஜ்ஜியம்)
Posted Date: June 01, 2016 at 03:31
சைவத்திற்கும் தமிழுக்கும் அளப்பரிய தொணடாற்றிய செந்தமிழ்ச்செல்வி கமலா அம்மாவின் மறைவுச்செய்தி கேட்டு நாம் மிகவும் துயருறுகிறோம்.
அன்னாரின் மறைவு சைவத்திற்கும் தமிழுக்கும் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும்.
அம்மா அவர்கள் வல்வை சிதம்பராக்கல்லூரியில் ஆசிரியாக சேவைசெய்த காலத்தில் நான் அம்மாவிடம் மானவனாக கல்வி பயின்றிருக்கிறேன்.
ஆங்கிலம் மற்றும் சங்கீதம் ஆகிய பாடங்களை அவவிடம் பயின்றிருக்கிறேன்.
அம்மா எமக்கு கல்வி போதிக்கும்போது எல்லா மானவர்களிடமும் ஒரு தாயைப்போன்ற மிகுந்த பாசத்துடனும் நாம் எல்லோரும் நன்றாக படித்து முன்னேறி வாழ்வில் நல்ல ஒரு ஸ்தானத்தை வகிக்கவேண்டும் என்ற முழுஅக்கறையுடன் எமக்கு கல்வி போதிப்பார். அம்மா எம்மீது காட்டிய பாசத்தையும் எமது முன்னேற்றத்தில் அவர் கொண்டுள்ள அக்கறையையும் எண்னும்போது இவரை ஏன் எல்லோரும் கமலா ரீச்சர் என்று அழைக்கிறார்கள் கமலா அம்மா என்றல்லவா அழைக்கவேண்டும் என எண்னிகொள்வேன்,
மல்லாகத்தைச்சேர்ந்த சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்புக்குட்டி அவர்களும் தமிழுக்கும் சைவத்திற்கும் தொண்டாற்றினார். எமது செந்தமிழ்ச்செல்வி கமலா அம்மாவும் அந்த அம்மையாருக்கு நிகராகவே தொண்டுகள் செய்துவந்துள்ளார். ஆனால் எமது துரதிர்ஷ்டம் எமது அம்மாவைவிட அந்த அம்மையாருக்குத்தான் அதிக புகழ் கிடைத்தது. இதற்குக்காரணம் எமது சமூகஅக்கறைஇன்மையே ஆகும்.
இந்தமாதிரியான விடயம் எமது வல்வை மண்னுக்கு ஒரு புதிய விடயம் அல்ல.
ஆறுமுகநாவலர் வாழ்ந்த அதேகாலத்தில்தான் எமது ஊரில் பண்டிதர் சங்கரவைத்திலிங்க புலவர் வாழ்ந்துவந்தார். உண்மையில் எமது சங்கரவைத்திலிங்க புலவர்தான் ஆறுமுகநாவலரைவிட மிகஅதிகமாக தமிழுக்கும் சைவத்திற்கும் தொண்டாற்றியிருந்தார். ஆனால் புகழும் மாலையும் மரியாதையும் ஆறுமுகநாவலருக்குத்தான் கிடைத்தது. எமது புலவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.
எமது செந்தமிழ்ச்செல்வி கமலா அம்மா விடயத்திலும் சரித்திரத்தின் அதே சம்பவம் மீண்டும் நடந்தேறியிருக்கிறது.
எதுஎப்படியிருந்தாலும் தமிழையும் சைவத்தையும் உளமார நேசிப்பவர்களின் உள்ளத்தில் பண்டிதர் சங்கரவைத்திலிங்க புலவரினுடைய புகழும் எமது செந்தமிழ்ச்செல்வி கமலா அம்மாவினுடைய புகழும் மங்காத தீபமாக குண்றிலிட்ட விளக்காக பிரகாசித்துக்கொண்டே இருக்கும்.
எமது செந்தமிழ்ச்செல்வி கமலாவின் அம்மாவின் பிரிவால் வாடும் அவரது அன்புக்கணவர் பெரியதம்பி ஐயாவுக்கும் அவரது பிள்ளைகள் அணைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
எமது செந்தமிழ்ச்செல்வி கமலா அம்மாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல எமது வல்வை நெடியகாட்டுப்பிள்ளையாரப்பனை பிராத்திக்கிறேன்.
நன்றி
வணக்கம்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.