யாழ் உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி கனகராணி சண்முகலிங்கம் அவர்கள் 10-08-2024 சனிக்கிழமை அன்று இரவு இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற குட்டிதம்பி சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான குட்டிதம்பி கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
தனுஜாந்தினி(Canada), கிரிஜாந்தினி(Canada), பிராணவரூபன்(UK), சுகந்தினி(Australia), ஜமுனாதீரன்(Srilanka) ஆகியோரின் அன்புத் தாயரும்,
சிவபாலரட்ணம்(Canada), அனந்தகிருஷ்ணன்(Canada), வத்சலா(UK), நிராகுலகாந்தன்(Australia), கலையரசி(Srilanka), ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற இனிதிராணி, சுதேசராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றசதாசிவத்தின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக 12-08-2024 இன்று திங்கடகிழமை கல்கிசை மகிந்த மலர்சாலையில் காலை 09.00 மணிமுதல் வைக்கப்பட்டு, தகனக்கிரியை 14.00 மணியளவில் நடைபெற்று, மாலை 05.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.