இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் மரண அறிவித்தல் – பொன்னுத்துரை இரட்ணஜோதி ( பபி சித்தப்பா )
பிரசுரிக்கபட்ட திகதி: 01/07/2015 (புதன்கிழமை)
பொன்னுத்துரை இரட்ணஜோதி ( பபி சித்தப்பா )
மட்டக்களப்பை பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை இரட்ணஜோதி இன்று 2015.06.30 ஆம் திகதி மாலை காலமாகிவிட்டார்.
அன்னார் முன்னாள் துறைமுக அதிகாரசபை அதிகாரி ஆவார்.
அன்னார் பொன்னுத்துரை இராசலட்சுமியின் பாசமிகு மகனும், பண்டிதர் வைத்தியலிங்கம் காந்தலட்சுமியின் பாசமிகு மருமகனும், நீலாம்பிகையின் பாசமிகு கணவரும், அபிராமி, கணேசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிவசுப்பிரமணியம், கயல்விழி ஆகியோரின் அன்பு மாமனாரும், கவினின் பாசமிகு பேரனும் ஆவார்
மேலும் அன்னார் காலஞ்சென்ற பாக்கியசோதி, காலஞ்சென்ற இராஜசிங்கம், பாலசிங்கம்,சிவராணி, திலகராணி, ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற கனகநாயகம் சிவநாயகியின் அன்பு பெறாமகனும், பத்மநாதன் சிவநாதன், சிவேந்திரநாதன், விஜயநாதன். ஜோதிநாதன், இராஜநாதன், ஆகியோரின் ஒன்றுவிட்ட அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற தையல்நாயகி, சங்கரநாதன், கைலாசபதி, வாலாம்பிகை, கருணாம்பிகை, அமுதாம்பிகை, சிவக்கொழுந்து, காலஞ்சென்ற முருகவேள், முத்துக்குமரன், ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் வல்வெட்டித்துறை தெணி வைரவர் பகுதியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று நாளை வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.