சிறார் பருவகாலத்திலே எமது உதயசூரியன் கடற்கரையில் விளையாடத் தொடங்கி, இல்ல விளையாட்டுப் போட்டி காலங்களில் இல்லங்கள் கட்டுமான பணியை முன்னெடுத்து வந்தவர். எமது கழகம் சம்பந்தமான எல்லாவித விளையாட்டுக்களிலும் தவறாது பங்கெடுத்து கலந்து கொள்வார்.
லண்டனில் இருந்து…
பிரித்தானியா வந்து குடியேறிய பின் எமது உதயசூரியன் கழகத்தை வளர்க்க வேண்டும், இங்கிருந்து தாய்க்கழகத்திற்கு உதவிகள் செய்ய வேண்டும் என்ற தொலைநோக்கில் 2003 இல் உதயசூரியன் கழகத்தை; லண்டனில் ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று வரை மாபெரும் பங்களிப்பைச் செய்து வரும் மூத்த உறுப்பினர் ஆவார்.
2011ம் ஆண்டு காலத்தில் இருந்து நிர்வாகத்தில் உபதலைவர், பொருளாளர் பொறுப்புக்களில் ஒன்பது வருடங்கள் நிர்வாகக அங்கத்தவராக சேவைகளை எமது கழகத்திற்கு ஆற்றியுள்ளார். 2003 முதல் இன்று வரை உதயசூரியன் கழகத்தின் முக்கியமான வேலைத்திட்டங்கள் அனைத்திலும் அன்னாரின் பங்களிப்பு அபரிதமானது
2003 இல் மின் இயந்திரம் (லைற் எஞ்சின்) வாங்கியது
உதயசூரியன் கழகத்திற்காக காணி வாங்கியது
மின் இயந்திரம் பாதுகாக்க கட்டிய கட்டடம்,
இன்றைய புதிய வாசிகசாலை
தங்கும் விடுதி (கெஸ்ட் கவுஸ்)
மிகப் பெரும் வேலைத்திட்டமான, இன்று பல்லாயிரம் மக்கள் கடற்கரையில் கூடும் வகையில் கட்டப்பட்டுள்ள பாதுகாப்பு அணையின் வேலைத்திட்டத்தில் அன்னாரின் பங்களிப்பை யாரும் மறக்க முடியுமா?
இரண்டு கடற்கரையையும் இணைக்கும் இரண்டு பாலங்களையும் அன்னாரே 7 இலட்சம் ரூபா செலவில் கட்டித்தந்தார்;
பட்டப்போட்டியை தொடர்ந்து மாலையில் முதன்முதலில் இந்திய நட்சத்திரங்களை அழைத்து இசை நிகழ்ச்சியை ஒழுங்கமைத்து எமது உதயசூரியன் உல்லாசக் கடற்கரையை மக்கள் வெள்ளமாக்கிய பெருமை அன்னாரையே சாரும்.
அணைக்கட்டுத் திறப்பு விழாவிற்கு முதன்முதலாக உதயசூரியன் கழக சீருடை மற்றும் கழுத்துப்பட்டியை தனது முயற்சியால் அறிமுகப்படுத்திய பெருமையும் அன்னாரையே சாரும்.
அனைத்து விழாக்களிலும் பங்கெடுத்து முழுமூச்சாக முன்னுதாரணமாக நின்று எமது கழகத்திற்கு அளப்பரிய சேவை ஆற்றியவர் நீங்கள்
எப்பொழுதும் எமது தெரு சுத்தமாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்து அதற்காக உழைத்த உறவு எமது ராஜம்மான்
அன்னாரின் இழப்பு உதயசூரியன் கழகத்திற்கு ஒரு மாபெரும் பேரிழப்பு
அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.