யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி திரேசம்மா தேவராசா(லட்சுமி) அவர்கள் 11 - 03 - 2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் அவர்கள் காலஞ்சென்ற இறப்பியல் நேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற இராசப்பு தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தேவராசா அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி நொய்லின், திருமதி மேரி அமல்டா, காலஞ்சென்ற மேரி கியூரியா, திருமதி பற்றீசியா, திரு அன்ரன் றொபேட், திரு அன்ரன் றொபின்சன், திரு அன்ரன் றோகான் அவர்களின் அன்புத் தாயாரும்,
திரு அமலதாஸ், திரு முரளி, திரு அன்ரனீஸ் உதயகுமார், திரு ஜேசுதாஸ், திருமதி யசிந்தா, திருமதி மேரி ஸாமின் அவர்களின் மாமியாரும்,
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 13 - 03 - 2017 திங்கட்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் வல்வெட்டித்துறை நறுவிலடி ஒழுங்கையில் அவரது இல்லத்திலும், புனித செபஸ்டியார் தேவலாயம் வல்வெட்டித்துறையில் நடைபெற்று பின்னர் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: March 13, 2017 at 12:35
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன் .
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.