தெணியம்பை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் சின்னமலை தொண்டைமானாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகாமசுந்தரி திருநாவுக்கரசு அவர்கள் இன்று (25.10.2025) அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 25/10/2025 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி சிவகாமசுந்தரி திருநாவுக்கரசு
தோற்றம் 13. 11. 1944 மறைவு 25. 10.2025
தெணியம்பை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் சின்னமலை தொண்டைமானாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகாமசுந்தரி திருநாவுக்கரசு அவர்கள் இன்று (25.10.2025) அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் கந்தசாமி திருநாவுக்கரசு (நில அளவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்ற நடனசிகாமணி, காலம் சென்ற பார்வதிப் பிள்ளையின் மகளும், காலஞ்சென்ற கந்தசாமி, குண்டுமணி தங்கம் ஆகியோரின் மருமகளும்,
சேந்தன், ஸ்கந்தன், மேகலா ஆகியோரின் தாயாரும்,
ஜெயந்திமதி, ரேவதி, ஜெயவிந்தன் ஆகியோரின் மாமியாரும்,
காலம் சென்ற யோகாசிகாமணி, காலம் சென்ற சண்முகசிகாமணி, நகுலசிகாமணி, வனிதாமணி, காலம் சென்ற ஜெயவீரசிகாமணி, காலம் சென்ற ரூபமணி ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற காந்திமதி, காலஞ்சென்ற கிருஷ்ணசர்மா, காலஞ்சென்ற சம்பந்த மூர்த்தி மற்றும் ரதிசேனா (பொன்மணி) ஆகியோரின் மைத்துனியும்,
மாதுமை, தெய்வீகன், காவியா,வித்தகன், வக் ஷினி, அஸ்வினி, அக்கிஷன் ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை (26.10.2025) பி.ப 2 மணியளவில் சின்னமலை தொண்டைமானாற்றில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று தொடர்ந்து பி.ப 4 மணிக்கு காட்டுப்புலம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை ஏற்றுக் கொள்ளுமாறு உற்றார் உறவினர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.