யாழில் மீளுருவாக்கம் செய்யப்படும் 400 வருடங்கள் பழமையான சிவன் ஆலயம் !
பிரசுரிக்கபட்ட திகதி: 23/08/2024 (வெள்ளிக்கிழமை)
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 400 வருடங்கள் பழமையான சிவன் ஆலயம் மீளுருவாக்கம் செய்யும் பணி ஆரம்பிக்கபப்ட்டுள்ளது.
அழிவடைந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட வட்டுக்கோட்டை துணைவி ஆலயத்தினை மீளுருவாக்கம் செய்யும் பணி , யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் புஸ்பரட்ணம் தலைமையில் நேற்றைய தினம் (22) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கல்வெட்டில் இருந்த தகவல்
இவ் ஆலயத்தின் எஞ்சிய பாகங்களையும் அத்திவாரங்களையும் அழிபாடுகளையும் கொண்டு இவ்வாலயமானது கற்பகிரகம, அந்தராளம், முன்மண்டபம், துணைக்கோவில்கள், சுற்றுமதில், மடங்கள், கேணி என்பவற்றை கொண்டிருந்தது என்பதனை உறுதிப்படுத்த முடிகின்றது.
இவ்வாலயத்தின் கற்பக்கிரகத்தின் பின்புறத்தில் பொறிக்கப்பட்ட கிரக சாசனத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாலயமானது 400 வருடங்கள் பழமைவாய்ந்த ஆலயமென்பதுடன் ஆலயத்தின் பெயர் பிரகேதீஸ்வரர் என்பதனையும் இக் கல்வெட்டில் இருந்து உறுதிப்படுத்திக் கொள்ள முடிகின்றது.
மிகத் தொன்மையான எமது முன்னோர்களின் வழிப்பாட்டுத் தலமான இவ்வாலயம் பல ஆண்டு காலம் கவனிப்பார் இன்றிக் காணப்பட்ட நிலையில் அதனை மீள்உருவாக்கம் செய்வதற்கு நீண்ட காலம் முயற்சி எடுக்கப்பட்டது.
இந் நிலையில் தற்போது அமெரிக்கா புலம் பெயர் தமிழர் ஒருவர் ஆலயத்தினை பழைய நிலைக்கு மீள் உருவாக்கம் செய்வதற்குரிய நிதியுதவியினை வழங்கியுள்ளார்.
அதன்டிப்படையில் இவ்வாலயத்தினை பழைய நிலைக்கு மீள் உருவாக்கம் செய்வதற்குரிய திட்ட முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டு தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியுடன் யாழ்ப்பாண மரபுரிமைய மையத்தினரால் இவ் வாலயம் மீளுருவாக்கம் செய்யப்படவுள்ளது.
மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தலைமையில் நடைபெற்ற சம்பிரதாயபூர்வமாக ஆரம்ப நிகழ்வில் ஆலயத்திற்கு நிதி உதவி அளிக்கவுள்ள புலம்பெயர் தமிழருடன், தொல்லியல் திணைக்களகத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய பிரதிப் பணிப்பாளர் பந்துலு, இவ்வாலயத்தினை மீளுருவாக்கம் செய்யும் முக்கிய பணியில் இருக்கும் கபிலன், துஸ்யந்தி , யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் உறுப்பினர் பார்த்திபன், மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட முன்னாள் உத்தியோகத்தர் நாக ஜெயக்குமார் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். (பிரதி)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.