வவுனியாவில் கஞ்சாவுடன் வல்வையைச் சேர்ந்த ஒருவர் கைது
பிரசுரிக்கபட்ட திகதி: 08/11/2017 (புதன்கிழமை)
வவுனியா நகரப் பகுதியில் இலங்கை போக்குவரத்துச்சபை பேரூந்து நிலையத்தில் பயணப் பையினுள் நுட்பமான முறையில் உருமறைப்புச் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த கேரளக் கஞ்சாவுடன் யாழ்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 55 வயதுடைய குடும்பஸ்தரை நேற்று முன்தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளதாக வவுனியா போலீசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து வவுனியா நகரப் பகுதியில் உள்ள இலங்கை போக்குவரத்துச்சபை பேரூந்து நிலையத்தில் வைத்து யாழ்பாணத்தில் இருந்து வவுனியா வந்த அரச பேரூந்தை சோதனையிட்ட போது கஞ்சாவுடன் குறித்த நபர் சிக்கினார்.
மேற்கண்ட செய்தி யாழ் தினக்குரல் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.