1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி - கந்தசாமி தில்லைநடராசா (காண்டீபன்)
பிரசுரிக்கபட்ட திகதி: 20/06/2016 (திங்கட்கிழமை)
1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
கந்தசாமி தில்லைநடராசா (காண்டீபன்)
மலர்வு :-19-09-1962 உதிர்வு:- 04-07-2015
அன்புடனே வாழ்ந்த எம் அருமை அண்ணனே
ஆண்டு ஒன்று ஆனாலும் ஆறாது எம் வலிகள் என்றுமே
இவ்வுலகில் நீயிருந்தால் எமக்கென துன்பமடா
ஈடில்லா இன்பம் நாமடைவோம் - எம் தலைவனே
உன்முகம் காண தினமும் ஏங்குதடா எம்மனமெல்லாம்
ஊருலகில் நீ வாழா உன் விதி முடிந்ததடா
எல்லையில்லா அன்புகளும் வஞ்சமில்லா புன் சிரிப்பும்
அத்தனையும் நிறைந்த எம் தலைவனடா நீ என்றுமே
பலநூற்றாண்டுகள் சென்றாலும் ஆறாது எம் வடுக்கள்
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்
யாழ் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், தெணியம்பை மு/ புதுக்குடியிப்பு, சென்னை ஆகிய இடங்களில் வசித்தவருமாகிய கந்தசாமி தில்லைநடராசா (காண்டீபன்) அவர்களின் 1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
எதிர்வரும் 23ஆம் திகதி வியாழக்கிழமை காலை நடைபெறவுள்ள 1 ஆம் ஆண்டு கிரியையிலும், மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.