இந்திய சமுத்திரத்தில் கடற்கொள்ளையர்களுக்கு எதிரான பணியை நிறைவுசெய்துள்ள நேட்டோ
பிரசுரிக்கபட்ட திகதி: 25/11/2016 (வெள்ளிக்கிழமை)
இந்திய சமுத்திரப் பரப்பில் கடற்கொள்ளையர்களுக்கு எதிரான பணியை தாம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக நேட்டோ (The North Atlantic Treaty Organization -NATO) நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இறுதியாக பணியாற்றிய வீரர்கள் கடந்த 19 ஆம் திகதி செசில்லெஸ் (Seychelles) நாட்டிலிருந்து தமது விமான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
"Operation Ocean Shield," எனப் பெயரிடப்பட்ட கடற்கொள்ளையர்களுக்கு எதிராக, குறிப்பாக சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, கடந்த 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட்17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. நேட்டோவின் இந்த நடவடிக்கையால் இந்திய சமுத்திரப் பரப்பில் கடற்கொள்ளையர்களின் வர்த்தகக்கப்பல்கள் மீதான நடவடிக்கை பெருமளவு குறைந்ததுடன், கடந்த 2 வருடத்தில் கடற்கொள்ளையர்களின் தாக்குதல் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.