200 வது ஆண்டை முன்னிட்டு மெதடிஸ்த பாடசாலையில் நடைபெற்றவரும் நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 28/06/2023 (புதன்கிழமை)
200 வது ஆண்டை முன்னிட்டு பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் பாடசாலையில் பவனி இடம்பெற்றது.
பவனி நேற்று காலை 07.00 மணியளவில் பாடசாலையிலிருந்து ஆரம்பமானது . அதிபர் திருமதி பலராணி ஸ்ரீதரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு, ஆழ்வாப்பிள்ளை ஸ்ரீ (Divisional Secretariat Vadamaradchi North) அவர்களும், சிறப்பு விருந்தினராக திருமதி ஜனனி லதெர்சன் (Deputy Director of Education(Planning), Zonal Education Office, Vadamaradchi) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
அத்துடன் பிற்பகல் 02.30 மணியளவில் ஓய்வு பெற்ற அதிபர் ஆசிரியர்கள் கௌரவிற்கும் நிகழ்வும் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திருமதி நாளஜினி இன்பராஜ் (Senior Assistant Secretary, Ministry of Education, Northern Province) அவர்களும், திருமதி ரஞ்சனி ரகுநாதன் (Deputy Director (Planning), Divisinal Secretariat- Karaveddy) அவர்களும் கலந்து கொண்டார்கள்.
200 வது ஆண்டை முன்னிட்டு பருத்தித்துறை மெதடிஸ்த பாடசாலையில் 2 ஆம் நாளான இன்று காலை 08.30 மணிக்கு பிரதான மண்டபத்தில் கடித உரை மற்றும் 200 வது ஆண்டை சிறப்பிக்கும் நூல் வெளியிடப்பட்டுள்ளன.
அதிபர் திருமதி பலராணி ஸ்ரீதரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பேராசிரியர் சிவகொழுந்து ஸ்ரீசட்குணராஜ்(Vice Chancellor, University of Jaffna) அவர்களும், சிறப்பு விருந்தினராக பேராசிரியர் M.A. சாந்தகுமாரி (Department, of Human Resource Management, University of Jaffna) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
நிகழ்வில் 200வது ஆண்டை முன்னிட்டு கடித உறையும், நூல் வெளியீடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவிகளின் இசை, நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
3 ஆம் நாளான நாளை பரிசளிப்பு விழாவும், நிறுவுணர் தின நிகழ்வும் நாளை காலை 08.30 மணிக்கு பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.