வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட முன்பள்ளிகளின் சுகாதார மேம்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக இன்றைய தினம் நெடியகாடு கணபதி முன்பள்ளி ஆனது வல்வெட்டித்துறை பொதுச்சுகாதார பரிசோதகரினால் களத்தரிசிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது முன்பள்ளியின் தோட்டம், வகுப்பறைச்சூழல், கழிவுமுகாமைத்துவம், முதலுதவி தொடர்பான விடயம், அவசர நிலைமைக்கான தயார் நிலை, நீர் மற்றும் மலசலகூட வசதிகள், பல் துலக்குவதற்கான வசதிகள், விளையாட்டு திடல், முன்பிள்ளை பருவ விருத்தி, கற்றல் சூழல், உள சமூக நல்வாழ்க்கை, கைகழுவும் வசதிகள்,பல் துலக்கல், தனிநபர் சுகாதாரம், ஆரோக்கியமான உணவுப்பழக்கவழக்கம், சுகாதாரப்பரிசோதணைகள்,விளையாட்டு நேரம், தொடர்பாடல் இடைத்தாக்கங்கள், நடத்தை மாற்றம், சமுதாயத்தின் வினைத்திறனான பங்களிப்பு என்பன பற்றி முன்பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது
அத்துடன் கழிவு முகாமைத்துவ செயற்றிட்டத்தில் திண்மக்கழிவுகளுக்கான நிறக்குறியீடுகளை பயன்படுத்தி தரம்பிரித்து கழிவுகளை அகற்றுதல் தொடர்பாகவும் முன்பள்ளி சிறார்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.