வல்வை விக்னேஸ்வர சனசமூக சேவா நிலையத்தினால் நடாத்தப்படும் 2018 ஆம் ஆண்டிற்கான மாபெரும் வினோத (வி) சித்திர பட்டப்போட்டி சிறப்பாக இடம்பெற்றது.
வல்வை விக்னேஸ்வர சனசமூக சேவா நிலையத் தலைவர் திரு சு.கெங்காரூபன் தலமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக கடல் தொழில் மற்றும் நீர்வள அமைச்சர் மஹிந்த அமரவீர வீராவும் சிறப்பு விருந்தினராக வட மாகாண சபை உறுப்பினர் M.K.சிவாஜிலிங்கமும் கலந்து கொண்டார்கள். இவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் திரு.அங்கஜனும் கலந்து கொண்டார்.
பட்டப் போட்டியைத் தொடர்ந்து கல்வி சாதனையாளர்களின் (2017) கௌரவிற்பு விழாவும் அதனைத் தொடர்ந்து தமிழக இசைக் கலைஞர்களின் இசைக் கச்சேரியும் இடம்பெற்றது.
நேற்று முன்தினம் வல்வை உதயசூரியன் கடற்கரையில் இடம்பெற்ற மாபெரும் வினோத (வி)சித்திர பட்டப்போட்டி 2018, அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற தமிழகக் கலைஞர்கள் பங்கு கொள்ளும் இசை நிகழ்ச்சி என்பவற்றைக் காண மக்கள் கூட்டம் கடந்த வருடத்தைப் போன்று இம்முறையும் உதயசூரியன் கடற்கரையை சூழ்ந்திருந்தார்கள்.
உதயசூரியன் பிரதான வீதி, வல்வை சந்தி, நெடியகாடு மற்றும் வாடி ஒழுங்கை வழியாக என கடற்கரைக்கான சகல பாதைகளாலும் பார்வையாளர்கள் போட்டித் திடலை நோக்கி வந்திருந்தார்கள்.
மிகவும் சிறந்த முறையில் கடற்கரை மைதான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையில், பத்திரிகையாளர்கள், படப்பிடிப்பாளர்கள், விருந்தினர்கள், போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் என நிகழ்வைப் பார்க்க வந்துள்ளவர்கள் வேறாக அமர்த்தப்பட்டிருந்தார்கள்.
வினோத (வி)சித்திர பட்டப்போட்டியில், சுமார் 58 ற்கு மேற்பட்ட பட்டங்கள் போட்டியில் பங்கெடுத்து வானில் பறந்திருந்தன. இவற்றில் நடுவார்களால் தெரிவு செய்யப்பட்ட 30 பட்டங்களிற்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.
சிறியது முதல் பெரியது வரை, முப்பரிணங்களில், பட்டக் கலைஞர்களின் மாறுபட்ட சிந்தனைகளின் வெளிப்பாடாக பங்கெடுத்திருந்த அனைத்துப் பட்டங்களும் வினோத (வி)சித்திர பட்டப்போட்டியில் வெளிப்படுத்தியிருந்தன. வினோத (வி)சித்திர பட்டப்போட்டி 2018 இல் வானில் அசாத்தியிருந்த பறக்கும் மேடையில் மொம்மலாட்டம், அன்னப்படகு, உருமாறும் ரான்போமர், எயர் ஆட்டோ, இந்திர விமானம், காட்சில்லாவும் காலகேயனும், இரட்டை வால் சுறா, கைக்கடிகாரம், டிராகன், சட்டலைட், எலியன் கப்பல், மிக்செவன், குதிரை வண்டி, ஹெலி, தள்ளுவண்டி, நங்கூரம், டாட்டா வாகனம், திருக்கை, ஆமை, 3D முக்கோணம், குப்பை வாளிகள், பூக்கூட்டம், ரொக்கற், உளவுத்துறை, விமானகூட்டம், அறுகோணம், எலியன் விமானம், வண்ணத்திப்பூச்சி, எலியன் கப்பல், வேல், ராகன், கணவாய், வெளிச்சவீடு, கத்தரி தோட்டத்து வெருளி, 10 நம்பர் சாவி, கத்தரிக்கோல், ஏலியன்ஸ் விமானம், நட்சத்திர கூடு, நான்கு முக்கோணங்கள், அறுகோண கூம்பு, பூனை ,முதலை, காட்சி பட்டம் கணவாய், அன்னம், விமானம், குத்துச் சண்டை மேடை , நங்கூரம், வேல், வீதியை அழுத்தும் வாகனம் பட்டங்களின் பெயர்களைக் குறிப்பிடலாம்.
இப் பட்டங்களில் முதலாம் இடத்தை – ம.பிரசாந்த் – பறக்கும் மேடையில் மொம்மலாட்டமும், இரண்டாம் இடத்தை - மயூசன் ஆரோகி – அன்னப்படகும், மூன்றாம் இடத்தை - வெ. இராஜேந்திரன் – உருமாறும் ரான்போமரும் பெற்றுக்கொண்டது.
மேலும் பட்டப் போட்டிகளில் பங்குபற்றிய பட்டங்களிற்கு புள்ளிகள் வழங்கி, நடுவர்களும் கெளரவிற்கப்பட்டார்கள்.
கடந்த வருடங்களைப் போலவே இந்த முறை இடம்பெற்ற பட்டப்போட்டி நிகழ்வுகள் முழுதையும் வெளிநாட்டினர் ஒருவர் படம் பிடித்திருந்தார்.
2018 ஆம் ஆண்டிற்கான மாபெரும் வினோத (வி) சித்திர பட்டப்போட்டியில் முதன் முறையாக வெளியூர் கலைஞர்களின் பட்டங்களும் போட்டியில் பங்கெடுத்து வானில் பறந்திருந்தன. தொண்டைமானாறு மற்றும் உடுப்பிட்டி பகுதிகளிச் சேர்ந்த கணவாய் மற்றும் டிராகன் வடிவப் பட்டங்களே போட்டியில் பங்கெடுத்த பட்டங்கள் ஆகும். ஆனாலும் இரண்டு பட்டங்களும் வெற்றி பெறத் தவறி விட்டன.
இப்போட்டிகளில் பங்குபற்றிய பட்டங்களில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற போட்டியாளர்களுக்கு மஹி நூடில்ஸ் (Maggi Noodles) நிறுவனத்தினரும் பணப் பரிசில் வழங்கினார்கள். 1 ஆம், 2 ஆம் மற்றும் 3 ஆம் இடங்களுக்கு தலா 15,000/-, 10,000/- மற்றும் 5,000/- ரூபா மஹி நூடில்ஸ் (Maggi Noodles) நிறுவனத்தினரால் வழங்கப்பட்டது.
இதனிடையே போட்டி ஏற்பாட்டாளர்களால் 1 ஆம், 2 ஆம் மற்றும் 3 ஆம் இடங்களுக்கு ஒரு பவுன் தங்கம், 1/2 பவுன் தங்கம் மற்றும் சைக்கிள் வழங்கப்பட்டது.
இம்முறை உட்பட கடந்த 3 பட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டு தனது கடின உழைப்பை வெளிப்படுத்தி முதற் பரிசை தொடச்சியாக வென்றுள்ளார் வல்வையைச் சேர்ந்த பட்டக் கலைஞர் திரு.மகேந்திரன் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டப் போட்டியானது பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு மாலை 07.00 மணி வரை இடம்பெர்ரமையும் , அதனைத் தொடர்ந்து தென்னிந்திய கலைஞர்களின் இன்னிசைக் கச்சேரியும் இடபெர்றது.
3 D முக்கோணங்கள்
குப்பை வாளிகள்
காட்சி பட்டம் கணவாய்
Air Auto
விமான கூட்டங்கள்
காட்சில்லாவும் காலகேயனும்
விமானம்
அன்னப்படகு
டாட்டா வாகனம்
வெளிச்சவீடு
குதிரை வண்டி
ஹெலி
கத்தரி தோட்டத்து வெருளி
பறக்கும் மேடையில் மொம்மலாட்டம்
ஆமை
காட்சில்லாவும் காலகேயனும்
குத்துச் சண்டை மேடை
ரொக்கெட்
ராகன்
நங்கூரம்
வேல்
முதலை
சட்லைட்
எலியன் கப்பல்
எலியன் விமானம்
10 நம்பர் சாவி
ரொக்கெட்
இரட்டை வால் சுறா
உருமாறும் ரான்ஸ்போமர்
நக்கூரம்
கத்தரிக்கோல்
தள்ளுவண்டி
பூக்கூட்டம்
ராகன்
கைக்கடிகாரம்
Spinner
ஜெட் விமானம் மிக்ஸ் செவென் விமானம்
அறுகோண கூம்பு
நட்சத்திர பூ
வீதியை அழுத்தும் வாகனம்
இந்திரலோக வாகனம்
பூனை
வண்ணத்துப்பூச்சி
வேல்
வெளிநாட்டினர் பட்டங்களை படம் எடுப்பதை காணலாம்
உடுப்பிட்டி பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட ராகன்
வருகை தந்திருந்த விருந்தினர்களின் உரை நிகழ்த்தும் போது
மூன்று இடங்களைப் பெற்ற போட்டியாளர்களுக்கு மஹி நூடில்ஸ் நிறுவனமும், போட்டி ஏற்பாட்டாளர்களினால் வழங்கப்படும் பரிசில்கள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.