கடந்த வெள்ளிக்கிழமை (29) நைஜீரியாவின் கினியா வளைகுடாவில் (Gulf of Guinea) கடத்தப்பட்ட எண்ணை தாங்கிக் கப்பல் ஒன்றிலிருந்த கப்பல் கப்டன் உட்பட்ட 5 மாலுமிகளை, கடத்தல் காரர்கள் கப்பலில் இருந்து வெளியேற்றி நைஜீரியாவின் மறைவிடம் ஒன்றிற்கு கொண்டு சென்றுள்ளார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவின் தென் கிழக்கு பகுதியான Biafra பகுதியில் தனி நாடு ஒன்றிற்காக போராடிவரும் கிளர்ச்சியாளர்களே இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுவதுடன், கடந்த அக்டோபர் மாதம் 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபட்டுள்ள, தடை செய்யப்பட்ட Radio Biafra இனுடைய இயக்குனர் Nnamdi Kanu என்பவரை விடுதலை செய்யாவிட்டால் கப்பலை வெடி வைத்து தகர்ப்போம் என்று கடத்தல் காரர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
லைபீரியாவில் பதிவு செய்யப்பட்ட (Liberian-flagged vessel) கிரேக்க நாட்டைச் சேர்ந்த குறித்த இந்தக் கப்பல் தற்பொழுது, நைஜீரியாவின் அயல் நாடான பெனின் (Benin) நாட்டின் பிரதான துறைமுகமான கொற்றனு (Cotonou) கரையோரத்தில் கப்பலின் ஏனைய மாலுமிகளுடன் நங்கூரமிடப்பட்டுள்ளது.
பெனின் நாட்டின் கடற்படையினரால் தற்பொழுது குறித்த கப்பல் பாதுகாக்கப்பட்டுவருகின்றது.
இதேவேளை நேற்று (5) அதிகாலை நைஜீரியாவின் கினியா வளைகுடாவில் பொன்னி தீவிற்கு (Bonny Island) 25 கடல்மைல்கள் தென் மேற்குத் திசையில் கொள்கலன் கப்பலான ‘Safmarine Kurmano’ என்னும் கப்பல் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சோமாலியா கடற் கொள்ளையர்களை விட மிகவும் பயங்கரமான கடற் கொள்ளை காரர்களாள சித்தரிக்கப்படும் இப்பிரதேச கடற்கொள்ளையர்கள் தாக்கம் நைஜீரியாவின் கினியா வளைகுடாவில் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.