Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Saba Rajendran (Sri Lanka)
Posted Date: April 08, 2019 at 19:37
தம்பி ராஜ்குமாரின் ஆதங்கம் புரிகிறது. பலருக்கும் இந்த ஆதங்கம் இருக்கிறது. ஆனால் ஒன்றிணைந்து திட்டம் போட்டு செயல்படாமல் இருக்கிறோம். செயல்படத் தொடங்குவோம். " வல்வை சனசமூக நிளைய பவளவிழா மலரில் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளேன். அந்த நேர்காணலில் இருந்து தொடர்புடைய கருத்தை இங்கே தருகின்றேன். இது வல்வையரான எங்களால் முடியாத காரியம் இல்லை. இங்கே கருத்தைப் பகிர்ந்து கொள்வோம்.
வல்வையின் எதிர்காலம் –
கலாநிதி சபா. இராஜேந்திரனுடன் ஒரு நேர்காணல்
ந. அனுசியா , ச. வினோதினி
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
(கலந்துடையாடலின் ஒரு பகுதி )
உலகத்திலே உள்ள பல பிள்ளைகளை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுடன் ஒப்பிடும்போது எமது பிள்ளைகள் திறமையில் குறைந்தவர்கள் இல்லை. இங்கிருந்து வெளிநாடுகளில் போய் படிக்கும் எங்கள் ஊரவர்களைப் பாருங்கள். அதிகமானோர் திறம்படச் செய்கின்றனர். ஊரிலே வசிக்கும் எமது பிள்ளைகளுக்கும் வெளியூரில் வசிக்கும் ஊர்ப் பிள்ளைகளுக்கும் ஒரே விதமான திறமைகள்தான் உள்ளுக்குள்ளே இருக்கின்றன. இங்கே திறமை வெளிப்படவில்லை. அங்கேயுள்ள சூழ்நிலையால் திறமை வெளிப்பட்டுள்ளது. ஒரு அணைக்கட்டினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரின் சக்தி நிலையான ஆற்றலாக (Potential Energy) இருக்கிறது. அணையின் அடிப்பாகத்தில் தண்ணீரைத் திறந்து விட்டால், தண்ணீர் வேகமாக வெளிப்படும். நிலையான ஆற்றல் இயக்க ஆற்றலாக ( Kinetic Energy) ஆக மாற்றமடைகிறது. தண்ணீரின் வேகத்தினால் சுழரும் இயந்திரத்தின் துணையோடு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
எமது மாணவர்களுக்கிடையே உள்ள நிலையான ஆற்றலை இயக்க ஆற்றலாக மாற்றவேண்டும். எப்படி மாற்றுவது? பெற்றோரும், ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து திட்டம் போட்டுச் செயலாற்றினால் சாதிக்கமுடியும்.
முதற்கட்டமாக ஒரு யோசனையைத் தெரிவிக்க விரும்புகிறேன். ஊரிலுள்ள பாடசாலைகளின் தரம் உயர்த்தப்படவேண்டும். தரமான மாணவர்கள் வெளியூர்ப் பாடசாலைகளுக்குச் செல்வதால் இதைச் செய்யமுடியாதிருப்பதாக ஆசிரியர்கள் சொல்கிறார்கள். இங்கே பாடசாலைகளின் தரம் குறைவாக இருப்பதால் வெளியே செல்வதாக பெற்றோர்களும் மாணவர்களும் கூறுகிறார்கள். இரண்டையும் நாங்கள் ஒரே நேரத்தில் செய்யவேண்டும். மாணவர்களை உள்ளூரில் தக்க வைப்பதற்கு நாங்கள் தரம் வாய்ந்த மாணவர்களுக்கு Scholarship கொடுக்கவேண்டும். பரீட்சையில் சராசரி 70% ( இதை மாற்றி அமைக்கலாம்) க்கு மேல் புள்ளீகள் எடுக்கும் மாணவர்களுக்கு மாதம் 1000/= ரூபா ஊக்கத்தொகையாகக் கொடுக்கலாம். ஆரம்பத்தில் சிறிது சிறிதாகத்தான் மாணவர்கள் சேர்வார்கள். பாடசாலையின் தரம் உயர, மேலும் மாணவர்கள் சேர்வார்கள். இதற்கான செலவு மிகவும் பெரிதல்ல. கொண்டாட்டங்களுக்கு நாங்கள் செலவழிக்கும் பணத்தின் ஒரு பகுதியே போதும்.
வெளியூர்ப் பாடசாலைகளில் படிக்காமல் உள்ளூரில் படித்தால் மாணவர்களுக்கு அதனால் பெரிய அனுகூலமேயுள்ளது. வெளியூருக்குப் போவதால் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலங்கள் வீணாகப்போகின்றது. அத்துடன் உடம்பும் அலுக்கின்றது. இந்த நேரத்தை படிப்பிலும் விளையாட்டிலும் செலவழித்தால் நிச்சயமாக அவர்களுக்குப் பலனுள்ளதாக இருக்கும். ( இந்தக் காரணத்திற்காகவே நான் ஹாட்லிக்கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் விடுதியில் இருந்தேன். என்னால் பலவற்றையும் செய்யமுடிந்தது) .
இப்படிப் பலதையும் சொல்லிக்கொண்டே போகலாம். முதலில் எங்கேயாவது இருந்து ஆரம்பிப்போம்.
சபா. இராஜேந்திரன் (குட்டிமணி)
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: April 07, 2019 at 19:02
அனைவரும் சிந்திக்கவேண்டிய சிறந்தபதிவு ;
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.