நேற்று யாழ் அரங்கக் கலை அரங்கத்தினால் Welcome to Sunday Show என்னும் வாராந்தர நிகழ்வான நாடக ஆற்றுகையில் இடம்பெற்ற மரம் என்னும் நாடக ஆற்றுகையினை சிறப்பிக்கும் வகையில் இடம்பெறுகின்றது இந்தக் கவிதை
யுகம் யுகம்மாய் நெருப்பு பிளம்பை
கக்கும் சூரியனின் தாகம் தீர்ப்பவனாய்
மண்ணுக்கு உரமாகி
மழைக்கு வரமாகி
மனித குலத்துக்கும் உயிராகி
உயிர்களுக்கெல்லாம் உயிராகி
பூமி பந்தில் மரமாய்
அவதரித்தவர்கள் நாம் . . . . . !
கடும் நச்சு காற்றை வடிகட்டி
சுவாசக் காற்றை
சுத்தமாய் நித்தம் தரும்
இணையிலா இயந்திரமே நாம் . . !
இது மட்டுமா . . .
நீங்கள் வெளியிடும்
கார்பன் டை ஒக்ஸ்சைடை கிரகித்து
பூமியின் வெப்பத்தை குறைக்கும்
சேவையாலனும் நாமே . . !
மண்ணில் வேரோடி
மண் அரிப்பை தடுத்து .. .
நில சரிவுகளையும் தடுத்து . .
நிலத்தடி நீரையும் அதிகரிக்கிறோம் ! !
கல் எரியும் கரங்களுக்கும்
கனிவுடனே கனிதரும்
கற்பக விருட்சம் நாமே . . . .
கோடரி கொண்டு தறித்தாலும்
விரகாய் , தளபாடமாய், பாதுகாவலனாய்,
இன்னும் பலவாய்
உனக்காக வருகிறோம் . . . .
எம்மை எரித்தால்
சாம்பலாய் உரமாகி
அனைத்தும் அளிக்கும்
வள்ளலாய் நாம் உன்னை
வாழவைப்போம் . . !
மானிடா . . . . .
ஒன்றை புரிந்து கொள்
எம் சந்ததியில் ஒருவரை அழித்தால்
இருவரை வளர்த்துவிடு
இல்லையேல்
நாளை உந்தன் சந்ததி . .
. . . . . . . . . . . . . . . . ? ? ? ? ? ? ? ?
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (Canada)
Posted Date: May 31, 2016 at 13:14
மனிதர்களுக்கு உண்மையை சொல்லும் சிறந்த கவிதை வாழ்த்துக்கள் !
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.