காங்கேசன்துறையினூடான பருத்தித்துறை - பொன்னாலை AB 21 வீதி 27 வருடங்களுக்கு பின்னர் இன்று காலை 8.30 மணிக்கு பொது மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் இந்த வீதியை பொது மக்களின் பாவனைக்காக மீண்டும் திறப்பது குறித்து அறிவித்திருந்தார்.
1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20 ஆம் திகதியிலிருந்து ஏபீ 21 பிரிவுக்குட்பட்ட இந்த வீதி மூடப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் மயிலிட்டியை அடைவதற்கு இருந்துவந்த சுமார் 50 கிலோமீற்றர் தூரம் குறைந்துள்ளது.
குறித்த பாதை இன்று காலை 8.35 மணியளவில் திறந்து வைக்கப்பட்டு யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராச்சி உத்தியோகபூர்வமாக போக்குவரத்து சபை பஸ் சேவையையும் ஆரம்பித்து வைத்தார்.
இவ்வீதி மயிலிட்டித்துறைமுகத்தினை அண்டிய பகுதியில் இதுவரை காலமும் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் 3 கிலோ மீற்றர் வரையான பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக இருந்ததுடன் இராணுவத்தினரின் போக்குவரத்து மட்டுமே இடம்பெற்று வந்தது
இந்நிலையில் இவ் வீதியூடாக நாளை தொடக்கம் நேர அட்டவணைப்படி போக்குவரத்து சபையின் பஸ் மூலம் பயணிகள் பஸ் சேவை இடம்பெறவுள்ளது. மக்கள் துவிச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிளில் தனிப் பயணங்கள் செய்வது ஓரிரு வாரங்களின் பின்னர் அனுமதிக்கப்படுவார்கள் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
யாழ் குடாநாட்டில் அமைந்துள்ள மிக நீளமான வீதி பருத்தித்துறை - பொன்னாலை வீதி என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.