பொலிகண்டி செம்மீன் வி.கழக 1ஆம் ஆண்டு விழா நிறைவு, சாகச விளையாட்டுக்கள் நேற்று இடம்பெற்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 28/07/2014 (திங்கட்கிழமை)
பொலிகண்டி செம்மீன் விளையாட்டுக் கழகத்தின் 1வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவ் விளையாட்டுக் கழகத்தினால் பொலிகண்டி மேற்கு ஊறணி குடியேற்றக் கடற்கரையில் நடாத்தப்பட்டது.
நேற்று பிற்பகல் 01.30 மணிக்கு திரு.நா. தங்கவேலாயுதம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டிக்கு பிரதம விருந்தினராக திரு.இ.த.ஜெயசீலன் (பிரதேச செயலாளர் வடமாராட்சி வடக்கு பருத்தித்துறை) அவர்களும், சிறப்பு விருந்தினராக திருமதி கலைச் செல்வி திலீபன் (DMO, பிரதேச வைத்தியசாலை, வல்வெட்டித்துறை) அவர்களும், கெளரவ விருந்தினராக திரு.H.H.K.J.C சமரசிங்க (வல்வெட்டித்துறை பொலீஸ் அதிகாரி), திரு. WTD தரங்க RSP (7 ஆம் விஜியபாகு ரெயிமென்ட் இராணுவ பிரிவு ஊரிக்காடு வல்வெட்டித்துறை), திரு.ந அனந்தராஜ்(தலைவர், நகராட்சி மன்றம் வல்வெட்டித்துறை), திரு.சி.தவனேஸ்வரன் (கிராம உத்தியோகத்தர் பொலிகண்டி மேற்கு J /393), திரு.தார்சியல் நிருபன் நிஷானந் (பங்கு தந்தை சக்கோட்டை செபஸ்தியார் தேவாலயம்), திரு.பா.முகுந்தன் (விளையாட்டு உத்தியோகத்தர் பருத்தித்துறை) ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
இந்நிகழ்வின் வரிசையில் விருந்தினர்களை வரவேற்றல், கொடியேற்றல், மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம் மற்றும் ஆசியுரைகளுடன் ஆரம்பமான விளையாட்டுப் போட்டி பத்து வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளுக்கான மெய்வன்மைப் போட்டியைத் தொடர்ந்து, வெளிக்கழகங்களுக்கிடையிலான கிரிஸ் கம்பம் ஏறுதல், தலையணை சண்டை, சாப்பாட்டுப்போட்டி, கயிறிழுத்தல் போட்டிகளைத் தொடர்ந்து ஆவலுடன் எதிர்பார்த்திருந்த சாண்டோ மாணவர்களின் வீரதீர சாகச நிகழ்வுகள் இடம் பெற்றன.
வீரதீர சாகச நிகழ்வில் பருத்தித்துறை நகர புகழ்பெற்ற சான்டோ ஆ.துரைரத்தினம் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட செம்மீன் விளையாட்டுக் கழக வீரர் கணேசமூர்த்தி கவிந்திரன் (யோகன்) அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் கழக வீரர்களின் மயிர் கூச்செறியச்செய்யும் வீர தீர சாகஸ நிகழ்வாக டிராக்டரினை ஒருவர் தனது நெஞ்சில் 67 முறைகள் ஏற்றி சாதனை புரிந்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.