அராபிய கடற்பரப்பில் சூறாவளி தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/05/2021 (வியாழக்கிழமை)
அரேபிய கடற்பரப்பில் (Arabian sea) தென்கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட தாழ் அமுக்கம் காரணமாக சூறாவளி தாக்கம் உருவாகியுள்ளது.
அடுத்து வரும் சிலதினங்களில் இந்தத்தாக்கம் தீவிரம்பெற்று இலங்கையின் வடக்கு மேற்கு நோக்கி கடக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாளை முதல் இந்தத் தாழமுக்கம் மேலும் தீவிரமடையலாம். தீவிரம் பெற்ற சூறாவளி இலங்கையின் வடக்கு மேற்கு நோக்கி திசையூடாக கடக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனால், அடுத்து வரும் சில தினங்களில் காங்கேசன்துறையில் இருந்து மன்னார் வரையும், கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையும் உள்ள கரையோரப்பிரதேசங்களில் கடல் சற்றுக் கொந்தளிப்பாக இருக்கும் என அறிவிக்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.