வடமராட்சியின் வல்வெட்டித்துறை உட்பட பல இடங்களுக்கு நாளை காலை 08.30 முதல் மாலை 05.30 மணிவரை மின்தடைப்பட்டிருக்கும் என அறிவித்தல் விடப்பட்டுள்ளது.
உயர் அழுத்தம் மற்றும் தாழ் அழுத்த மின் விநியோகங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நேற்று திங்கட்கிழமை தொடக்கம் வெள்ளிக்கிழமை வரை குடாநாட்டின் சில இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு, கெருடாவில், சிதம்பராக்கல்லூரி, மயிலியதனை, உடுப்பிட்டி V.C, உடுப்பிட்டி வாசகசாலை சந்தி, இலந்தைக்காடு, நாச்சிமார் கோயிலடி, கொற்றாவத்தை, பொலிகண்டி ஜஸ் தொழிற்சாலை, ஆலடி, நெடியகாடு வெள்ளை ரோட், உடுப்பிட்டி சந்தி, உடுப்பிட்டி நாவலடி, வன்னிச்சியம்மன் கோவிலடி, பாரதி சனசமூக நிலையடித்தடி, பழைய பொலீஸ் நிலையத்தடி, பொக்கனைச் சந்தி, அண்ணா சிலையடி, மண்டான் ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (வலம்புரி)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.