பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியில் ஆய்வுகூடம் திறந்து வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 27/03/2015 (வெள்ளிக்கிழமை)
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியில் மகிந்தோதய திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆய்வுகூடம் ஒன்று இன்று பிற்பகல் 3 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கல்வி இராஜாங்க அமைச்சர் ராதாகிருஸ்ணண், மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன், மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இதே போன்றதொரு ஆய்வு கூடம் சில கடந்த மாதம் 27 ஆம் திகதி பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் உயர்தர பாடசாலையில் திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.