நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை - வளிமண்டலவியல் திணைக்களம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/09/2017 (புதன்கிழமை)
நாட்டின் தென்மேற்குப் பிரதேசத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் சில நாட்களுக்கு தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் Department of meteorology) தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் 75 முதல் 100 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டம் காணப்படலாம் என்றும் வடக்கு, வடமத்திய, வடமேல், ஊவா, மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் வலுவான காற்றை எதிர்ப்பார்க்க முடியும். மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மாகாணங்களிலும் மழை பெய்யும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.