இலங்கை அரசின் இவ் ஆண்டுக்கான சிறந்த ஆசிரியருக்கான ”பிரதீபா பிரபா ” விருது வல்வெட்டித்துறை சேர்ந்த திரு ராஜதுரை சாந்தகுமார் அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. திரு ராஜதுரை சாந்தகுமார் அவர்கள் தற்பொழுது கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலத்தில் (தேசிய பாடசாலை) ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.
இலங்கை கல்வி அமைச்சு பாடசாலைகளை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்யும் அதிபர்கள், மற்றும் சிறந்த கற்ப்பித்தலை மேற்கொள்ளும் ஆசிரியர்களைத் தெரிவுசெய்து இலங்கை ஆசிரியர் தினத்தில் கௌரவிப்பது வழக்கமாகும்.
இந்த விருது வழங்கும் நிகழ்வு இன்று 06.10.2014 செவ்வாய்கிழமை கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த அரங்கில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலந்து கொண்டு விருது வழங்கியிருந்தார்.
வல்வை மானாங்கானையைச் சேர்ந்த 37 வயதாகும் இவர், தனது ஆரம்பக் கல்வியை கணபதி பாலர் பாடசாலையிலும், தரம் 1 முதல் தரம் 5 வரை வல்வை மகளிர் மகா வித்தியாலயத்திலும், பின்னர் வல்வை சிதம்பரக் கல்லூரியிலும் கல்வி கற்றிருந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Valvaisuman (Srilanka)
Posted Date: October 07, 2015 at 23:34
உள்ளத்தில் உயர்வாகி
இதயத்தில் இறையாகி
ஆசிரிய சேவையில்
அகிலம் போற்ற வாழ்பவரே
உங்கள் விருதால்
எங்கள் மண்
பெருமிதம் கொள்கிறது !
வல்வை சுமன்
Banu (London)
Posted Date: October 06, 2015 at 20:54
Congratulations sir, I'm your old student
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.