சீனாவில் உண்மையான ஜூராசிக் பார்க் இருந்தமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 22/02/2017 (புதன்கிழமை)
சீனாவின் ஷெய்ஜங் (Zhejiang) மாகாணத்தில் உண்மையான ஜூராசிக் பார்க் (Jurassic Park) இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 65 முதல் 145 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் படிமங்கள் மற்றும் வரலாற்றுக்கு முந்தைய 8 விலங்கு இனங்களை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
மொத்தம் 82 டைனோசர் படிமத்தளங்கள், 6 டைனோசர் இனம் மற்றும் 25 வகையான படிம டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்யதுள்ளனர்.
ஷெய்ஜங் ஹைட்ராலஜி மற்றும் ஜியோலஜி நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் குழுவினர் இத்தகவலை உறுதி செய்துள்ளனர்.
ஷெய்ஜங் பகுதியைச் சேர்ந்த 11,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 8 புதிய டைனோசர் இனங்கள், படிமங்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஷெய்ஜங் பகுதியில் அதிக டைனோசர்கள் வாழ்ந்தது நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஷெய்ஜங் அருங்காட்சியகத்தின் துணை பொறுப்பாளர் ஜின் சிங்ஷெங் தெரிவித்துள்ளார்.
புதிய கண்டெடுப்புகள் பல்வேறு வரலாற்றுக்கு முந்தைய உயிரினங்கள் அழிவுற்றிருப்பதை தெரியப்படுத்தியுள்ளன.
சிறுகோள் மோதியதால் ஏற்பட்ட காலநிலை மாற்றங்கள் மூலம் எரிமலை சீற்றம் உள்ளிட்டவை ஏற்பட்டு டைனோசர் இனம் அழிந்து போயிருக்கலாம் என கூறப்படுகிறது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.