வல்வையின் கடலிலிருந்தான தற்போதைய காட்சிகளின் முழுப் படத் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது. படங்களில் ஊரிக்காட்டில் இருந்து ஊரணி தீர்த்தக் கடற்கரை வரையான பகுதிகளின் காட்சிகள் பதிவாகியுள்ளன. ஆனாலும் ஊரிக்காட்டில் மிகவும் விளிப்பாக பச்சை நிறக் கூரைகளுடன் அமைந்துள்ள வல்வெட்டித்துறை இராணுவ முகாம் பகுதி (முன்னர் விடுதலைப் புலிகளின் கடல் புறா எனப்படும் கடற்படை முகாம் அமைந்த பகுதி) இத் தொகுப்பில் அடங்கவில்லை.
படங்களின் முழுத் தொகுப்பையும் எமது Facebook இனூடாக தரவிறக்கம் செய்யமுடியும்.
VVT – Thondaimanau coastal line
ஆதிகோவில், சிதம்பரக் கல்லூரி மைதானத்திற்கு பின் புறமாக, இராணுவ முகாமிற்கு அருகாமையில்
ஆதிகோவில்
ஆதிவைரவர் கோவில்
வாடி ஒழுங்கை வான் அமைந்துள்ள பகுதி (இப்பகுதியினூடாகவே முன்னர் தமிழகத்தின் தென் கோடிக்கும் யாழ் தீபகற்பத்திற்கும் இடையிலான பரிமாற்றங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் வல்வை ஸ்ரீ
முத்துமாரியம்மன் கோடியாக்கரையிலிருந்து இப்பகுதியிலேயே வந்து இறங்கியதாக கோவில் தொடர்பான செய்திகள் தெரிவிக்கின்றன. இப்பகுதியில் இன்றும் ஒரு பழைய கால கப்பலுக்குரிய நங்கூரம் கைவிடப்பட்டுள்ள நிலையில் உள்ளது)
வல்வை சிவகுரு வித்தியாசாலை
சிவகுரு வித்தியாசாலை, ஆதிகோவிலின் ஒரு பகுதி
சிவகுரு வித்தியாசாலை, மதவடி கப்பலுடையவர் விநாயகர் கோவில்
உதயசூரியன் கடற்கரை, கப்பலுடையவர் கோவில், விக்னேஸ்வர சனசமூக நிலையம்
உதயசூரியன் கடற்கரையின் தொடர்ச்சி
உதயசூரியன் கடற்கரையின் முழுத் தோற்றம்
மதவடிக் கடற்கரையின் முழுத்தோற்றம்
மதவடிக் கடற்கரையிலிருந்து ஆதிகோவில் வரை
மீனாட்சி அம்மன் கோவில் பகுதி
வல்வை மீன் சந்தை மற்றும் மணல் பகுதியை கொண்டை குளிப்பதற்கு ஏதுவான கடற்கரை பகுதி
மீனாட்சி அம்மன் கோவில், மீன் சந்தை, மாதா கோவில்
ரேவடி வான், வள்ளங்கள் கட்டும் பகுதி
வல்வைச் சந்தியின் பிற்பக்கத் தோற்றம்
புனர் நிர்மாணிக்கப்பெற்ற ரேவடிக் கடற்கரை, அரச சுங்க தொலைத் தொடர்பு கோபுரம்
ரேவடிக் கடற்கரை மற்றும் திரு.நாகரத்னம் என்பவரால் கட்டப்பெற்ற மாளிகை போன்ற வீடு
ரேவடிக் கடற்கரையின் ஒரு பகுதி, ரேவடி ஞானவைரவர் கோவில், வல்வை றேமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, குச்சம் கடற்கரையின் ஒரு பகுதி
மீனாட்சி அம்மன் கோவில் தொடக்கம் குச்சம் கடற்கரை வரை
குச்சம் சரஸ்வதி கோவில், குச்சம் கடற்கரையின் அடுத்த பகுதி, வாணி படிப்பகம்
மதவடி தொடக்கம் குச்சம் கடற்கரை வரை
கொத்தியால்
கொத்தியால் வானின் வெளிப்பக்கம்
கொத்தியால் வான்
கொத்தியால் வானிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள வள்ளம் ஒன்று
கொத்தியாலிலிருந்து திக்கம் முனை
கொத்தியால் கடற்கரை - குளிக்கும் நாய், இரைக்கு காத்து நிற்கும் பறவை –ஆங்காங்கே- குப்பைகள் (முழு நீள கடற்கரையிலும் தான்)
வல்வை புளுஸ் படகு, கன்னிப் பயணம் கொத்தியால் கடற்கரையிலிருந்து
குறிப்பு
கொத்தியாலிலிருந்து ஊரணி வரையான பகுதிகளின் தொகுப்பு பின்னர் இணைக்கப்படும்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Jeevan (Uk817563)
Posted Date: July 21, 2014 at 11:26
இது வரையில் யாரும் எடுத்திராத படங்களை எடுத்து, உங்கள் இணையத்தளம் ஊடாக வெளிநாட்டிள் உள்ளவர்கள் பார்க்க தந்ததற்கு நன்றி.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.