வல்வைக் கடலில் காணாமல்போன மீனவரை தேடும் பணி தொடர்கின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 02/09/2017 (சனிக்கிழமை)
நேற்று முன்தினம் வல்வெட்டித்துறை கடற் பிரதேசத்தில் காணாமல் போன மீனவரை தேடும் இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றது.
நேற்று முன்தினம் காலை காலை படகு ஒன்றில் மீன் பிடிப்பதற்காகக்ச் சென்ற வல்வெட்டித்துறை கொண்டக்கட்டையைச் சேர்ந்த வடிவேலு ஸ்ரீகாந் என்பவரே தனது படகுடன் காணாமல் போயுள்ளார்.
இதையடுத்து நேற்று ஆரம்பமான தேடுதல் இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றது. கடற் தொழிலுக்குச் செல்வதை நிறுத்தி சக மீனவர்கள் பத்திற்கு மேற்பட்ட கடற்கலங்களில் இன்று காலை மீண்டும் தேடுதல் பணியை ஆரம்பித்துள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.