Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

இந்திய நேஷனல் ஜியோகிராஃபியின் சிறந்த படங்களில் ஒன்றாக அர்ச்சுனனின் படம்

பிரசுரிக்கபட்ட திகதி: 08/08/2017 (செவ்வாய்க்கிழமை)
தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் நேஷனல் ஜியோகிராஃபியின் சிறந்த படங்களில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் ஆதித்யாவின் படம்தான் சிறந்த படமாகத் தேர்வுசெய்யப்பட்டது. இந்த வரிசையில் அடுத்து வந்திருப்பவர் வல்வையைப் பூர்வீகமாகக் கொண்ட அர்ச்சுனன். Daily dozen  இல் வெளியிடப்பட்ட 12 படங்களில் ஒன்றாகவும் வந்துள்ளது தாயிடம் பால் குடிக்கும் குரங்குக் குட்டி'யின் போட்டோ கடந்த வாரம் வெளியானது.  இது சம்பந்தமாக விகடனில் வெளிவந்த கட்டுரை அப்படியே கீழே கொடுக்கப்பட்டுள்ளது
 
’ஃபேஸ்புக்கில் படம் போடுவதைவிட..!?’ - நேஷனல் ஜியோகிராஃபி லைக்கிய கேமராமேனின் டிப்ஸ்
 வரவணை செந்தில்
 
கடந்த 2016-ம் ஆண்டில் நேஷனல் ஜியோகிராஃபியின் சிறந்த படங்களில், தமிழகத்தைச் சேர்ந்த வருண் ஆதித்யாவின் படம்தான் சிறந்த படமாகத் தேர்வுசெய்யப்பட்டது. இந்த வரிசையில் அடுத்து வந்திருப்பவர் அர்ச்சுனன்.  ``ஒரு கேமரா வாங்குவது என்பது, இன்றைக்கு சாதாரணமான ஒன்றாக இருக்கலாம். அதை வாங்கிக் கையாளக் கற்றுக்கொண்ட பிறகு, உங்களின் நோக்கம் என்னவாக இருக்கிறதோ, அதிலேயே கவனம் செலுத்த வேண்டும்" என்கிறார் அர்ச்சுனன். நேஷனல் ஜியோகிராஃபியின் `டெய்லி டஜன்' என்கிற சிறந்த 12 புகைப்படங்களில் ஒன்றாக இவர் எடுத்த `தாயிடம் பால் குடிக்கும் குரங்குக் குட்டி'யின் போட்டோ கடந்த வாரம் வெளியானது.  
 
 
சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்த அர்ச்சுனன், ஐடி நிறுவனம் ஒன்றில் டிசைன் ஆர்டிஸ்ட்டாக இருக்கிறார். பெரும்பாலான இன்றைய இளைஞர்களின் கனவுகளில் ஒன்றாக இருக்கும் டிஜிட்டல் எஸ்.எல்.ஆர் கேமரா கனவுதான் இவருக்கும் இருந்தது. வேலைக்குச் செல்லத் தொடங்கிய பிறகு, தன் வருமானத்தில் சொந்தமாக ஒரு கேமரா வாங்கினார். ஆனால், தனக்கு புகைப்படக் கலையில் ஆர்வம் வருவதற்குக் காரணமாக இருந்த நண்பர்களைப்போல, தொழில்முறை திருமண போட்டோகிராஃபராக ஆவதில்லை என்பதில் உறுதியாக இருந்துள்ளார். 
 
Photographer Archuanan
 
 
``கடந்த இரண்டு ஆண்டுகளாக நேஷனல் ஜியோகிராஃபிக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறேன். அதில் மூன்று நான்கு வகை உள்ளன. `எடிட்டர் பேவரைட்' என ஒரு பிரிவு உள்ளது. அதில் எனது புகைப்படங்கள் இதுவரை ஐந்து தேர்வாகியுள்ளன. அதில் வெளியிடப்படும் படங்களில் அதிகம் ஓட்டு விழும் படம் `நேஷனல் ஜியோகிராஃபி' புத்தகத்தில் இடம்பெறும். இது இல்லாமல், ஒவ்வோர் ஆண்டும் `வன உயிர் புகைப்படங்கள்' போட்டி ஒன்று நடத்துவார்கள். அதிலும் டெய்லி டஜன் பிரிவில் வெளியான புகைப்படங்கள் போட்டியிடும். என் எண்ணமெல்லாம் நேஷனல் ஜியோகிராஃபி தொடங்கி போட்டோகிராஃபிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இதழ்களில் பரிசு வாங்க வேண்டும் என்பதே! நான் அதை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறேன். நிலப் படங்கள், இரவுப் படங்கள் மற்றும் வன உயிர்கள் இவற்றை மட்டும்தான் நான் படம் எடுப்பேன். என் நண்பர்கள் சிலர்  ஆர்வத்தில் எஸ்.எல்.ஆர் கேமரா வாங்கி இயற்கை, நிலப்படங்கள்(Landscape) என்றெல்லாம் படம் எடுக்கத் தொடங்கியவர்கள், இப்போது மேரேஜ் போட்டோகிராஃபர்களாக மாறிவிட்டனர். சிலர் பகுதி நேரமும், சிலர் முழு நேர போட்டோகிராஃபர்களாவும் ஆகிவிட்டனர்.
 
``மாமல்லபுரத்தில் ஒரு `வாக்' போயிருந்தோம். அதாவது அங்கு உள்ள கட்டடக் கலை குறித்து ஒவ்வொரு பகுதியாகச் செல்லும் நடைப்பயணம் அது. அன்று மேகங்களும் சரியாக இல்லாத காரணத்தால், கையில் கேமரா இருந்தாலும் படங்களில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. அப்போதுதான் இந்தக் குட்டிக் குரங்கைப் பார்த்தேன். அதன் அம்மா மடியில் இருந்ததைப் பார்த்தவுடன் அதைப் படம் எடுக்க வேண்டும் எனப் படங்கள் எடுக்கத் தொடங்கினேன். அன்றைக்கு மாமல்லபுரத்துக்குச் சென்றதன் முக்கியக் காரணமே, காலை சூரிய உதயத்தைப் படம்பிடிக்கத்தான். ஆனால், அது நடக்கவில்லை என்கிற கவலையை இந்தக் குரங்குக்குட்டி போக்கிவிட்டது. வெறும் மூன்று படங்கள் மட்டுமே எடுத்தேன். அதில் ஒன்றுதான் தேர்வாகியுள்ளது" என்றார். 
 
``பொதுவாக நேஷனல் ஜியோகிராஃபியில் படம் வெளியாகிவிட்டாலே, புரொஃபஷனல் தகுதி கிடைக்கும். பொதுவாக ஒரு நல்ல படம் எடுத்திருக்கிறோம் என்றால் என்ன செய்வோம், ஃபேஸ்புக்கில் போடுவோம். அதில் போட்டோகிராஃபி தெரிந்தவர்கள் நான்கைந்து பேர் படம் குறித்து கருத்துச் சொல்வார்கள். மீதி விழும் லைக் எல்லாமே என் நட்பின் காரணமாகத்தான் இருக்கும். ஆனால், நேஷனல் ஜியோகிராஃபி மாதிரி இதழ்களின் இணையத்துக்கு அனுப்பும்போது பல்வேறுபட்ட கருத்துகள் கிடைக்கும். இதுவரை நூறு படங்கள் அனுப்பியிருந்தாலும் எடிட்டர் ஃபேவரைடில் ஐந்து படங்கள் மட்டுமே வந்துள்ளன. அதில் ஒரு படம் மட்டுமே டெய்லி டஜனுக்குத் தேர்வாகியுள்ளது. ஆனால், நாம் படங்களுக்கு உரிய அங்கீகாரமும் விமர்சனங்களும் அங்கேதான் கிடைக்கும். அங்கு அனுப்பும் படங்கள் தேர்வாகவில்லை என்றால், என்ன காரணத்தால் தேர்வாகவில்லை, என்ன தவறு செய்துள்ளோம் என்று நாம் கூர்ந்து நோக்கி அறிந்துகொள்ளலாம். பெரிய அளவில் கலர் கரெக்‌ஷன் போன்றவை மிக மிகக் குறைந்த அளவில் செய்திருந்தால் அனுமதிப்பார்கள். கொஞ்சம் கூடுதலாக இருந்தால்கூட தேர்வு செய்ய மாட்டார்கள்.  முகநூலில் படம் போடலாம்தான். இருந்தாலும் ஆர்வத்துடன் நீங்கள் எடுக்கும் படங்கள் அதை ரசிப்பவர்களைச் சென்று சேர இப்படியான தளங்களில்தான் பகிரவேண்டும்" என்று முடித்தார்.

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
‘வடக்கு மாகாண நீர் வளங்களும் அவற்றின் பயன்பாட்டு உத்திகளும் பங்கீட்டுக்கொள்கையும்’  நூல் வெளியீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
கந்தசஷ்ட்டி விரதம் அனுட்டிப்போருக்கு பழங்கள் அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
பல வருடங்களின் பின் பலாலி - வாசவிளான் வீதி மக்கள் பாவனைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 01/11/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை பட்டப் போட்டி திருவிழா 2025
பிரசுரிக்கபட்ட திகதி: 01/11/2024 (வெள்ளிக்கிழமை)
விளம்பரம் - காணி விற்பனைக்கு (ஊரிக்காடு)
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2024 (வியாழக்கிழமை)
கொழும்பு - காங்கேசன்துறை ரயில் சேவை 2 ஆக அதிகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2024 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி நடனசிகாமணி மகாலெட்சுமி
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2024 (புதன்கிழமை)
ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் செல்வி கஜிஷனா தர்ஷன்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2024 (புதன்கிழமை)
இன்றைய நாளில் - ஒப்பரேசன் ரிவிரச மற்றும் யாழின் மாபெரும் இடப்பெயர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - தியாகராஜா சண்முகராஜா
பிரசுரிக்கபட்ட திகதி: 29/10/2024 (செவ்வாய்க்கிழமை)
கொழும்பு - காங்கேசன்துறை புகையிரத சேவை நாளை மீண்டும் ஆரம்பம் (நேர விபரம் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 27/10/2024 (ஞாயிற்றுக்கிழமை)
சிவாஜிலிங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2024 (வியாழக்கிழமை)
நெல்லியடியில் கஜேந்திரகுமார் கைதாகி விடுதலை
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2024 (வியாழக்கிழமை)
2 போட்டிகளில் முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2024 (வியாழக்கிழமை)
முன்னாள் வல்வை நகரசபை உறுப்பினர் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/10/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - புவனேஸ்வரி விசாகரட்னம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/10/2024 (செவ்வாய்க்கிழமை)
தீர்க்கப்படாத பிரச்சினைகளை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/10/2024 (திங்கட்கிழமை)
வங்காள விரிகுடாவில் மீண்டும் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2024 (சனிக்கிழமை)
மணப்பெண் அலங்காரத்தில் 3 ம் இடத்தை பெற்ற யாழ் பெண்மணி
பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2024 (சனிக்கிழமை)
பொருளாதார விடயத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் பாதையில் அநுர
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2024 (வெள்ளிக்கிழமை)
கலைப்பரிதி விருது
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2024 (வெள்ளிக்கிழமை)
பருத்தித்துறையில் இடம்பெற்ற பண்பாட்டு பெருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2024 (வியாழக்கிழமை)
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் பங்குபற்றிய அரசியல் விவாதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2024 (வியாழக்கிழமை)
நடமாடும் விற்பனை சாவடி அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2024 (வியாழக்கிழமை)
நோபல் வென்றார் ஹான் காங்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/10/2024 (செவ்வாய்க்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Sep - 2019>>>
SunMonTueWedThuFriSat
1
2
34
5
6
7
89
10
1112
13
14
15161718192021
22232425
26
27
28
29
30     
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai