கப்பல் சொந்தக்காரர் வரிசையில் சிங்கப்பூர் முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/04/2016 (சனிக்கிழமை)
உலகில் கப்பல்களை வைத்திருப்பவர்கள் (Ship ownership) பட்டியலில், கப்பல் வர்த்தகத்தில் முன்னணியில் திகழும் சிங்கபூர் முதலிடம் பெற்றுள்ளது. சிங்கபூரை தளமாகக் கொண்டுள்ள கப்பல் சொந்தக்காரர்கள் ஆழ்கடலில் பயணிக்கக் கூடிய சுமார் 2,000 கப்பல்களை வைத்துள்ளனர். இவற்றின் மொத்த மதிப்பு 35.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
சிங்கபூரில் PIL (Pacific international lines) எனப்படும் தனியார் கப்பல் நிறுவனம் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தக் கப்பல் நிறுவனத்திடம் தற்பொழுது 138 கப்பல்கள் இருப்பதுடன் இவற்றின் மதிப்பு 3,394 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.