இலங்கை இறுதி யுத்தத்தின் போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் மனித உரிமைமீறல் தொடர்பாக சர்வதேச விசாரணையை வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டார்.
இன்று இடம்பெறுகின்ற வடமாகாண சபையின் 34 ஆவது அமர்வு தொடங்குவதற்கு சற்று முன்பாக சுமார் 0930 மணியளவில் அலுவலக வளாக வாசலில் சிவாஜிலிங்கம் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்திருந்தார்.
அமர்வு கூடியவுடன் சர்வதேச பொறிமுறை ஊடாகவே விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வடக்கு முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரனால் பிரேரணை ஒன்று முன்மொழியப்பட்டது. அதனை மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் வழிமொழிந்தார்.
குறித்த பிரேரணையை தெளிவாக வாசித்து விளங்கி கொள்ள தனக்கு ஒரு சில மணித்தியால கால அவகாசம் வேண்டும். அதன் பின்னர் பிரேரணை தொடர்பில் விவாதத்தை மேற்கொள்ளலாம் என எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா அவைத்தலைவரிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தற்போது கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி சிவாஜிலிங்கம் ஆர்ப்பாட்டம், முதல்வரால் பிரேரணை முன்மொழிவு http://t.co/HH1fFjfoRv
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.