வல்வை சிவன் ஆலயத்தில் சூரன் போர் சிறப்பாக நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 05/11/2016 (சனிக்கிழமை)
கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த கந்தசஷ்டியையின் பிரதான நிகழ்வான சூரன் போர் (சூரசம்ஹாரம்) வல்வெட்டித்துறை சிவன் கோவிலிலும் இன்று மாலை சிறப்பாக நடைபெற்றது.
இன்று மாலை 4 மணிக்கு முருகப்பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் பூசைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து முருகன்பெருமான் கேடயவாகனத்தில் எழுந்தருளி சூரனோடு போர் புரியும் நிகழ்வான சூரசம்ஹாரம் சுமார் 7 மணியளவில் நடைபெற்றது.
முருகப்பெருமானின் சூரசம்காரம் சிவன் கோவில் வீதியின் முன்பக்க பிரதான வீதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு சூரனோடு முருகன் போர் புரிவதும், சூரன் சக்கரவாகப் பட்சியாக மாறும் நிகழ்வு வல்வை அம்மன் கோவிலுக்கும் சிவன் கோவிலுக்கும் இடையிலான பொது வீதியில் நடைபெற்றது.
தேவர்களின் தூதரான காந்தருவர், முருகப்பெருமானுக்கு மாலை இடுவதும் மிகவும் சிறப்பாகக் சித்தரித்துக் காட்டப்பட்டிருந்தது
படங்களில் சூரசம்காரத்தைப் பார்ப்பதற்கும் தெய்வதரிசனத்தைப் பெறுவதற்கும் வந்திருந்த பக்தர்களையும் முருகப்பெருமானின் சூரசம்காரத்தையும் காணலாம்.
முருகப் பெருமானின் திருக்கல்யாணம் நாளை மாலை நடைபெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.