கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் ஒன்றை அடுத்த ஆண்டு இறுதிக்குள் பூர்த்தி செய்யக்கூடிய விதத்தில் வேலைகளை முன்னெடுப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதி வல்வைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நீச்சல் தடாகம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வல்வை ரேவடிக்கடற்கரையில் அமைந்துள்ள குறித்த காணியை பார்வையிட்ட பின், வல்வை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நீச்சல் தடாகம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள குறித்த காணி சுமார் 16 பரப்புக் கொண்டமைந்ததாகவுள்ளதுடன் இது இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு சொந்தமானதாகும். இப்பகுதியிலிருந்தே திரு.ஆனந்தன் அவர்கள் தனது பாக்குநீரிணையைக் கடக்கும் முதலாவது சாதனையை ஆரம்பித்திருந்தார், என்பதால் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகத்தை இப்பகுதியில் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டிதுறையின் மையப்பகுதி, இப்பகுதியில் அமைந்த பெரிய மற்றும் சாதகமான நிலப்பரப்பு போன்ற காரணங்களால் சுங்கத்தினர் காணியை கைமாற்ற தயக்கம் கட்டியிருந்ததாகவும் அமைச்சர் மங்கள சமரவீரவின் தலையீட்டினால் தற்பொழுது, வல்வையின் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள – வல்வை நகரசபைக்குச் சொந்தமான - பிறிதொரு 4 பரப்பு நிலத்தை பெறச் சம்மதித்து ரேவடியில் அமைந்துள்ள தமது காணியை கையளிக்கச் சம்மதிதுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனை முன்னிட்டு கடந்த 26 ஆம் திகதி விஜயத்தின் போது அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் சுங்க திணைக்கள அதிகாரி உட்பட்டோர் வல்வையின் ஊரணி முதல் ஊரிக்காடு வரையான சில - வல்வை நகரசபைக்குச் சொந்தமான - நிலங்களை பார்வையிட்டிருந்தனர்.
கீழே படத்தில் அமைச்சர் மங்கள சமரவீர் உட்பட்டோர் வல்வையின் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள வல்வை நகரசபைக்குச் சொந்தமான சில காணிகளை பார்வையிடுவதிப் படங்களில் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.