பயிர்களின் சேதங்களை அளவிட இலங்கையில் GPS தொழில்நுடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2015 (புதன்கிழமை)
பயிர்களுக்கு உண்டான சேதங்களை அறிய GPS களுடன் கூடிய செய்மதிகளின் (Satellites with GPS technology - Global Positioning System) அரசு பாவிக்கவுள்ளதாக விவசாய காப்பீட்டுத் திணைக்களத்தின் (Agriculture Insurance Board) செயலாளர் நாயகம் பந்துக வீர்சிங்க தெரிவித்துள்ளார். இதானால் விவசாயிகளுக்குண்டான இழப்பீடுகளை உடனடியாக வழங்க முடியும் என
அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு உலகவங்கியின் உதவியை நாடவுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் கீழ், விவசாயிகள் விவசாய காப்பீட்டு திணைக்களத்திற்கு, தமக்கு உண்டான நஷ்டங்கள் பற்றி, தமது நெல் வயல்களில் இருந்தே அறிவிக்க முடியும். இந்த தகவல் SMS மூலமாகவோ அல்லது Board through telephone களை தொடர்பு கொள்வதனாலேயோ பரிமாறப்படலாம்.
இந்த திட்டம் நடைமுறையில் வரும்போது, விவசாயிகள் தமக்குண்டான இழப்பீடுகளை தாமதமின்றியும், ஏனைய ஒழுங்கீனங்கள் இன்றியும் பெற்றுகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.