ஆந்திரப் பிரதேசத்தில் 2400 கிராமங்களைத் தத்தெடுக்கும் அமெரிக்க இந்தியர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/05/2015 (சனிக்கிழமை)
Smart Village-Smart Ward' எனும் திட்டத்தின் ஒரு அங்கமாக அமெரிக்காவில் வசிக்கும் சில இந்தியர்கள், இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள சுமார் 2400 கிராமங்களைத் தத்தெடுக்கவுள்ளார்கள்.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திரப் பிரதேச முதல்வருமான சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் அமெரிக்காவின் Los Angeles, San Jose, Chicago, New York, New Jersey, Washington, Portland மற்றும் Dallas ஆகிய பகுதிகளில் உள்ள அமெரிக்க இந்தியர்களைச் சந்தித்து 'Smart Village-Smart Ward' எனும் திட்டத்தை விளக்கியதன் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
'Smart Village-Smart Ward' திட்டத்த்தால் கவரப்பட்டுள்ள இவர்கள், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள, அதிலும் குறிப்பாக துறைமுக நகரான விசாகப் பட்டினத்தில் உள்ள மொத்தம் 2417 கிராமங்களை தத்தெடுக்கவுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.