போதைப்பொருள் குற்றச் செயல்களை தகவல்களை அறிவிக்க விசேட பிரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 14/08/2017 (திங்கட்கிழமை)
போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்கள் குறித்து பொதுமக்களின் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு விசேட நடவடிக்கைப் பிரிவொன்று பொலிஸ் அதிரடிப்படை தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு 24 மணிநேரமும் செயற்படும்.
0112-58-05-18, 0112-05-85-52 அல்லது 0112-08-10-40 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும்.
இதற்கு மேலதிகமாக 0112-08-10-44, 0112-58-84-99 என்ற தொலைநகல் (Fax) மூலமாகவும் தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.