வல்வெட்டித்துறையில் செய்யப்பட்டு வல்வைச் சிப்பந்திகளால், வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவின் Gloucester துறைமுகத்தைச் சென்றடைந்திருந்த Florence C Robinson எனப் பெயரிடப்பட்ட அன்னபூரணி பாய்மரக்கப்பலின் சரியான விபரங்கள் (Specification) பற்றி சில மாறுபட்ட தரவுகள் பல்வேறு இடங்களில் பிரசுரிக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக அன்னபூரணியின் அகலம் பற்றிய அளவில் சந்தேகங்கள் எம்மவரிடயே இருந்து வருகின்றன.
Tahiti Bound என்னும் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள, சரியானவை என நம்பப்படும் அன்னபூரணியின் தரவுகள் பின்வருமாறு.
Specifications of Florence C Robinson Ex Annaporani
Color of hull – Black
Material – Teak (Burma)
Length (Overall) – 122 feet (89 feet on deck, with 33 feet with jib boom)
Beam - 19 feet
Masts - 2 numbers (Fore mast was rigged Square, and Main mast was rigged Fore and aft)
Type - Brigantine
Sails - Made of Hemp
விபரங்கள் தமிழில்
கப்பலின் நிறம் - கறுப்பு
கப்பல் செய்யப் பயன்படுத்திய பொருள் – பர்மா தேக்கு
நீளம் - 122 அடி (மேல் தட்டு 89 அடி, பாய்களைக் காவும் மரம் 33 அடி)
அகலம் - 19 அடி
பாய்களைக்காவும் கம்பங்கள் – 2
வகை - பாய்மரக்கப்பல், (ஆங்கிலேயர்கள் Brigantine என அழைத்தார்கள்)
பாய்கள் - Hemp எனப்படும் சணல் வகையான மரத்திலிருந்து செய்யப்பட்டிருந்தது.
படத்தில் ஓவியமாக அன்னபூரணியை வரைந்துள்ளவர் திரு.நேரு
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.