இலங்கை பிரஜை அல்லது இலங்கையில் வசிக்கும் ஒருவர் தனது உடமையில் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின்(Foreign currency) அதிகபட்ச வரம்பு 15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்களாக அதற்கு சமமானதாக குறைக்கப்பட்டுள்ளது என இலங்கை மத்திய வங்கி (Central Bank of Srilanka) அறிவித்துள்ளது.
Foreign Exchange Act இல் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின் பிரகாரம், குறித்த 10000 அமெரிக்க டொலர்களை வைத்திருக்கும் நபர் எவ்வாறு குறித்த பெற்றார் என்பதையும் தெரிவிக்க வேண்டும் எனவும், மேலதிக வெளிநாட்டு பணத்தை தமது வெளிநாட்டு நாணயக் கணக்கில் அல்லது வியாபார வெளிநாட்டுக் கணக்கில் வைப்பில் இட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நடைமுறை இம்மாதம் 14 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.