ICT பாவனையில் இலங்கை 65 இடம், சிங்கப்பூர் முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2015 (வெள்ளிக்கிழமை)
சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திகளை வளர்ப்பதில் தகவல் மற்றும் தொழில்நுட்ப வசதிகளைப் பாவிப்பதில் (Information and communications technologies – ICTs) இலங்கை 65 ஆவது இடத்தில் உள்ளது என “World Economic Forum's Global Information Technology” வெளியிட்டுள்ள இந்த வருடத்திற்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் நேற்று வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், சிங்கப்பூர் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் தகவல் தொழில்நுட்பத்தை பாவிப்பத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது. ஆசியாவில் முதல் 10 இடங்களில் இடம்பிடித்துள்ள அடுத்த நாடு ஜப்பான் ஆகும்.
ஆசியாவில் பெரும்பாலான பகுதிகளில் வறுமை தொடர்வதாகவும், 2/3 பங்கு பெரும்பான்மையான ஆசிய நாடுகள், தரவரிசையில் கீழேயுள்ள அரைப்பகுதிகளிலேயே உள்ளன என்றும் மலேசியா 32 ஆவது இடத்தையும் மொங்கோலியா 61 ஆவது இடத்தையும், இலங்கை 65 ஆவது இடத்தையும், தாய்லாந்து 67 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திகளை வளர்ப்பதில் தகவல் மற்றும் தொழில்நுட்பத்தின் அனுகூலம் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்றும் ஆனால் தற்பொழுது உலகில் 50 வீதமானவர்கள் கைதொலைபேசியை சொந்தமாக வைத்திருந்த போதும், 39% வீதமானவர்களே இணையதள வசதியைப் பெற்றுள்ளனர் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் இந்தியா 84 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.