ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் - ஏப்ரல் 27 ஆம் திகதி அடிக்கல் நாட்டப்படலாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/03/2017 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் அமைக்க உத்தேசித்துள்ள கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகத்திற்குரிய அடிக்கல் நாட்டும் வைபவம் ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி இடம் பெறலாம் என தெரியவருகிறது.
கடந்த 17 ஆம் திகதி கொழும்பில் வெளிவிவகாரதுறை அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற சூட்டம் ஒன்றிலேயே இதுபற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் குறித்த அடிக்கல் நாட்டு வைபவத்தில் இலங்கை வெளிவிவகாரதுறை அமைச்சர், இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர், வடமாகாண முதலமைச்சர், வடமாகாண கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் குறித்த வைபவத்தில் கலந்து கொள்வார்கள் எனவும் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தின் இறுதி வாரத்தில் அதிலும் குறிப்பாக 27ஆம் திகதி அடிக்கல் நாட்டப்படும் என கலந்தாலோசிக்கப்பட்ட போதிலும் இது இன்னும் உத்தியோகபூர்வமாக முடிவு செய்யப்படவில்லை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.