தொண்டைமானாறு கடற்பரப்பில் கரை ஒதுங்கிய தமிழக மீனவர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/06/2016 (சனிக்கிழமை)
மீன்பிடிப் படகின் எரிபொருள் தீர்ந்த நிலையில் யாழ் வடமராட்சியின் தொண்டைமானாறு கடற்பரப்பில் நேற்று முன்தினம் படகு ஒன்றுடன் கரை ஒதுங்கிய ஐந்து இந்திய மீனவர்களை காங்கேசன்துறைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கைதான ஐவரும் தமிழ்நாடு நாகபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கடற்படை உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
கைதான இவர்களை கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேற்கண்டவாறு யாழ் தினசரிப் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.