வல்வெட்டித்துறை கடற்பரப்பில் கடந்த மாதம் 29 ஆம் திகதி கரை ஒதுங்கியிருந்த மீன்பிடி இழுவைப்படகு (Fishing Trawler) முக்கிய பகுதிகளான இயந்திரம், இழுவை உபகரணங்கள் போன்றவை அகற்றி எடுக்கப்பட்ட பின்னர் தற்பொழுது அதே இடமான வல்வெட்டித்துறை ஊரிக்காட்டு கடற்கரை பகுதியில் கைவிடப்பட்டுள்ள்ளது.
இயந்திரக் கோளாறு காரணமாக இழுவைப்படகு தரை தட்டும் பொழுது, குறித்த பகுதியில் அமைந்துள்ள பாறைகளின் மேல் சிக்கி இழுவைப்படகின் அடிப்பகுதி மிகவும் சேதம் அடைந்ததாலையே கைவிடப்பட்டுள்ள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த இழுவைப்படகானது இலங்கையின் தென்பகுதி மாத்தறை மீனவர்களுக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.