யாழ் மாவட்ட உற்பத்திப் பொருள்களுக்கான வாராந்த சந்தை மாவட்ட செயலத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளது.
முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களுக்கான சந்தை வாய்ப்பளிக்கும் முகமாக சங்கிலியன் பூங்கா வளாகத்தில் நடைபெறும் இந்த வாராந்த சந்தை பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாராந்த சந்தையில் யாழ் மாவட்ட விவாசாயத்துறை , கைத்தொழில்துறைசார் உற்பத்தி பொருட்களுக்கான விற்பனை செய்ய முடியும், இதனூடாக உற்பத்தியாளர்களின் இடைத்தரகர்களுக்கான செலவீனம் குறைக்கப்படுவதுடன் எதிர்காலத்தில் நுகர்வோரின் தேவைக்கேற்றவாறு உற்பத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியும். இதன் மூலம் விவசாயிகள் பெருளாதாரத்தின் முன்னேற்றமடைவதுடன் ஏனையவர்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்கமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சந்தர்ப்பத்தைப் பின்பற்றி பயன் பெற விரும்பும் முயற்சியாளர்கள் தமது பிரதேச செயலத்துடன் தொடர்பு கொள்ள முடியும் அத்துடன் அலுவலக நேரத்தில் 021 221 3861 , 077 884 2577 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ளமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.