எபோலா வைரஸ் தாக்கப்பட்டதாக சந்தேக்கிக்கப்படும் இறந்த பெண்ணின் இரத்தம் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
பிரசுரிக்கபட்ட திகதி: 20/08/2014 (புதன்கிழமை)
எபோலா வைரஸ் தாக்கப்பட்டதாக சந்தேக்கிக்கப்படும் இறந்த பெண்ணின் இரத்தம் இந்தியாவின் பூனே நகருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக MRI (Medical Research Institute) இன் இயக்குனர் தெரிவித்துள்ளதாக இலங்கையில் இருந்து வெளியாகும் டெய்லி மிரர் ஆங்கில இணையதள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தமுனுமய என்னும் 3 பிள்ளைகளின் தாயே அண்மையில் இந்தியாவிற்கு யாத்திரைக்கு சென்று திரும்பிய பின் மரணமடைந்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலுக்கு அமையவே இரத்தம் இந்தியாவிற்கு அனுப்பட்டுள்ளது. இலங்கையில் எபோலா வைரஸை பரிசோதிக்கக் கூடிய வசதிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது மேற்கு ஆபிரிக்க நாடுகள் சிலவற்றில் பரவியுள்ள எபோலா வைரஸ் மிகவும் அபாயகரமான ஒரு தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.